ஹாலிவுட் சீரியல் - "ஃப்ரீயா" நடிக்கும் ப்ரியங்கா சோப்ரா

Priyanka Chopra
Suresh| Last Updated: வெள்ளி, 9 அக்டோபர் 2015 (10:33 IST)
ஃப்ரீயாக என்றால் காசு வாங்காமல் என்று அர்த்தம் இல்லை. துணி விஷயத்தில் தாராளமாக நடிக்கிறார் என்று பொருள்.

 

 
ஹாலிவுட் படங்கள் அளவுக்கு சீரியல்களும் அங்கு பிரபலம். ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துக் கொண்டே சீரியலிலும் நடிப்பதுண்டு.
 
முதல்முறையாக இந்திய நடிகையொருவர், ஹாலிவுட்டில் தயாராகும் மெகா சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
 
குவாண்டிகோ என்ற அந்த மெகா சீரியலில் ப்ரியங்கா சோப்ராதான் நாயகி. அவரை மையப்படுத்திய கதையது. அந்த சீரியலில் முத்தக்காட்சிகள், படுக்கையறைக் காட்சிகள் என பலவும் இடம்பெறுகிறது. அதையெல்லாம் ஒப்புக் கொண்டுதான் நடித்து வருகிறார் இந்த முன்னாள் உலக அழகி.
 
இந்த மாத இறுதியில் தொலைக்காட்சியில் குவாண்டிகோ சீரியலை ஒளிபரப்புகிறார்கள். முதல் எபிசோடிலேயே பிகினியில் வருகிறாராம்.
 
பிகினின்னு சொல்லி பிளட் பிரஷரை எகிற வைக்கிறாங்களே.


இதில் மேலும் படிக்கவும் :