1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Modified: சனி, 1 மே 2021 (19:48 IST)

விஷாலுக்கு ஜோடியான பிரியா பவானி சங்கர்… பெண் விஜய் சேதுபதியாக மாறிவிடுவாரோ!

நடிகை பிரியா பவானி சங்கர் விஷால் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ் ரசிகர்களுக்கு செய்தி வாசிப்பவராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர். ஒரு காலத்தில் சின்னத்திரை நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவது கடினமாக இருந்த நிலையில் அதை பொய்யாக்கும் விதமாக சினிமாவிலும் நுழைந்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது குருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இன்றைய தேதியில் கொரோனா பிரச்சனைகளை எல்லாம் தாண்டி இரட்டை இலக்க எண்ணிக்கையில் படத்தைக் கைவசம் வைத்துள்ள நடிகையாக அவர் இருக்கிறார். இந்நிலையில் இப்போது புதிதாக விஷால் நடிப்பில் து பா சரவணன் இயக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். கிட்டத்தட்ட விஜய் சேதுபதி போல படங்களில் கமிட்டாகிக் கொண்டே செல்கிறார் என்று மற்ற நடிகைகளுக்கும் லைட்டாக பொறாமை வரத்தானே செய்யும்.