புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By VM
Last Updated : சனி, 29 செப்டம்பர் 2018 (10:55 IST)

தனுஸ்ரீதத்தாவின் பாலியல் புகாருக்கு நானே படேகர் அதிரடி பதில்

மிழில்தீராத விளையாட்டு பிள்ளைபடத்தில் கதாநாயகியாக நடித்தவர் தனுஸ்ரீதத்தா. இவர்  காலா படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இவருக்கு பிரியங்கா சோப்ரா உள்பட பலரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

தனுஸ்ரீதத்தா அண்மையில் பேசுகையில், ‘‘2008–ம் ஆண்டு ஹார்ன் ஓகே ப்ளீஸ் என்ற படத்தில் நடித்தபோது நானா படேகர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அதை வெளியே சொல்லக்கூடாது என்று அவரது ஆதரவாளர்கள் என்னை மிரட்டினார்கள்" என்றார்.

இந்நிலையில் தனுஸ்ரீதத்தா புகாருக்கு நானா படேகர் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:– ‘‘என் மீது தனுஸ்ரீதத்தா கூறியுள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. பாலியல் பலாத்காரம் என்பதற்கு அர்த்தம் என்ன?
படப்பிடிப்பில் நாங்கள் இருவரும் உட்கார்ந்து இருந்தோம். எங்களை சுற்றி 200 பேர் அமர்ந்து இருந்தார்கள். இதில் எப்படி பாலியல் பிரச்சினை ஏற்பட்டது. அவர் வழக்கு தொடர்ந்தால் சட்டப்படி சந்திப்பேன். யார் என்ன பேசினாலும் எனக்கு கவலை இல்லை. என் வேலையை நான் செய்து கொண்டிருக்கிறேன். அதை தொடர்ந்து செய்வேன் " என்றார்.