1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 19 மார்ச் 2015 (10:18 IST)

முருகதாஸின் இந்திப் படத்தின் பெயர் அகிரா

முருகதாஸ் சோனாக்ஷி சின்கா நடிக்கும் படத்தை இந்தியில் இயக்குகிறார். சில தினங்கள் முன்புதான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
 
தமிழில் தான் இயக்கிய கஜினி, துப்பாக்கி படங்களை இந்தியில் ரீமேக் செய்த முருகதாஸ் இந்தமுறையும் ஒரு ரீமேக்குடன்தான் இந்திக்கு சென்றுள்ளார். இந்தமுறை அவர் ரீமேக் செய்வது சாந்தகுமார் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளிவந்த மௌனகுரு.
 
அருள்நிதி நடித்த வேடத்தை இந்தியில் பெண்ணாக மாற்றி, சோனாக்ஷி சின்காவை நடிக்க வைக்கிறார். ஜான் விஜய் நடித்த ஊழல் போலீஸ் அதிகாரி வேடத்தில் அனுராக் காஷ்யப். சோனாக்ஷியின் தந்தை சத்ருகன் சின்காவும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.
 
இந்தப் படத்துக்கு அகிரா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.