திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Modified: செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (15:32 IST)

கேஜிஎஃப் 2 வெற்றிக்கு இதுதான் முக்கியக் காரணம்…. டிரீம் வாரியர்ஸ் பகிர்ந்த மாஸ் போஸ்டர்!

கேஜிஎப் 2 படத்துக்கு ரிப்பீட் ஆடியன்ஸ் அதிகளவில் வருவதால் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுவருகிறது.

கன்னடத்தில் எடுக்கப்பட்ட கே ஜி எஃப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான கே ஜி எஃப் 1 படம் இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளார்.

இந்த படம் 10000 திரைகளில் உலகம் முழுவதும் வெளியாகி ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் படம் வெளியான நான்கு நாட்களில் 540 கோடி ரூபாய் வரை உலகளவில் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாவது வாரம் தொடங்கியுள்ள நிலையில் தற்போதும் கூட்டம் குறையாமல் வசூலில் வெற்றி நடைப் போட்டு வருகிறது.

இதற்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுவது படத்துக்கு ரிப்பீட் ஆடியன்ஸ் அதிகளவில் வருவதால் படத்துக்கு வரும் கூட்டம் குறையவே இல்லை என சொல்லப்பட்டு வருகிறது. அதை உறுதி செய்யும் விதமாக படத்தை வெளியிட்டுள்ள டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் “Repeat Repeat Repeat” என்ற கேப்ஷனோடு மாஸான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.