1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 11 நவம்பர் 2014 (15:12 IST)

வீட்டு வாடகை மாதம் 15 லட்சம் - இந்திய நடிகையின் இமாலய செலவு

தயாரிப்பு செலவுகள் அதிகரித்துவிட்டது, தொழிலாளிகளுக்கு சம்பளம் தர இயலவில்லை என முதலாளிகள் ஒருபக்கம் புலம்புகிறார்கள். இன்னொருபக்கம் படத்துக்குப் படம் முன்னணி நடிகர், நடிகைகள் சம்பளத்தை கோடிக்கணக்கில் உயர்த்திக் கொண்டே போகிறார்கள். இந்த இன்பாலன்ஸின் ஒருமுகம்தான் கத்ரினா கைபின் வீட்டு வாடகை.
மும்பை கடற்கரையோரம் கத்ரினா தற்போது வசித்து வருகிறார். இந்த வீடு அவரது இந்நாள் காதலர் ரன்பீர் கபூரால் ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வீட்டின் ஒரு மாத வாடகை பதினைந்து லட்சங்கள். 
 
கத்ரினாவுக்கும், ரன்பீருக்கும் இந்த காசு வெறும் தூசு. சினிமாவிலும், விளம்பரங்களிலும் இருவரும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். மாதம் ஒரு கோடி ரூபாய் தரவும் அவர்களால் இயலும். பதினைந்து லட்சம் ஒரு பொருட்டல்ல.
 
அதிகாலையிலிருந்து நள்ளிரவுவரை வேலை பார்க்கும் உதவி இயக்குனருக்கு 100 ரூபாய் பேட்டா தர தயங்கும் அதே சினிமாதான் இவர்களுக்கு இப்படியொரு இமாலய செலவு செய்யும் பொருளாதாரத்தை தருகிறது என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.