1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sasikala
Last Modified: வியாழன், 23 ஜூன் 2016 (14:43 IST)

உதாரணம் சொல்லப்போய் உறக்கம் தொலைத்த சல்மான் கான்

உதாரணம் சொல்லப்போய் உறக்கம் தொலைத்த சல்மான் கான்

சுல்தான் படத்துக்காக மல்யுத்த காட்சியில் நடித்துவிட்டு வந்த போது, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணைப் போல் உணர்ந்தேன் என்று, சுல்தான் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் சல்மான் கூறினார்.


 


இந்த கருத்துக்காக சுல்தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போராட்டம் வெடித்துள்ளது. வழக்கும் தொடரப்பட்டுள்ளது. 
 
பிரபலமானவர்கள் எது சொன்னாலும், செய்தாலும் அது காது மூக்கு வைக்கப்பட்டே பார்க்கப்படும். அதுபோல்தான் இதுவும். சாதாரணமாக கடந்து செல்ல வேண்டிய விஷயத்தை அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் விளம்பரத்துக்காக பெரிசுபடுத்தியுள்ளன. பாலியல் பலாத்காரம் செய்யப்படும் பெண்களுக்கு ஆதரவாகவும், அவர்களை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியவர்களுக்கு எதிராகவும் இப்படி உக்கிரமாக இவர்கள் போராடுவதில்லை. 
 
உதாரணம் சொல்லப் போய் உறக்கம் தொலைத்து நிற்கிறார் சல்மான்.