1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Suresh
Last Updated : திங்கள், 3 நவம்பர் 2014 (10:13 IST)

ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவு -அமீர்கானுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

ஓரினச் சேர்க்கை உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. பல நாடுகளில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள சட்டப்படி அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
 
இதுபோன்ற விஷயங்களில் எப்போதும் சோம்பேறியாகதான் இந்தியா நடந்து வந்திருக்கிறது. இந்தியாவில் ஓரினச் சேர்க்கை சட்ட விரோதமானது.
 
கடந்த மாதம் நடந்த சத்யமேவ ஜயதே நிகழ்ச்சியில் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக அமீர்கான் கருத்து தெரிவித்திருந்தார். அதுதான் இப்போது சர்ச்சையாகியிருக்கிறது.
 
ஓரினச் சேர்க்கை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புக்கு மாறாக ஓரினச் சேர்க்கையை அமீர்கான் நியாயப்படுத்திப் பேசினார். தடுக்கப்பட்ட குற்றத்தை நியாயப்படுத்தி பேசியது நீதிமன்ற அவமதிப்பாகும்.
 
அமீர்கான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் மந்தீப் கவுர் சண்டிகர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 
 
அவரது மனுவை விசாரித்த நீதிபதி டிசம்பர் 19-ஆம் தேதிக்குள் இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி அமீர்கானுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.