செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sasikala
Last Modified: சனி, 11 மார்ச் 2017 (11:07 IST)

சம்பந்திக்காக ஹோலியைத் தவிர்த்த அமிதாப் குடும்பம்

ஐஸ்வர்யா ராயின் தந்தை மருத்துவமனையில் இருப்பதால், சம்பந்திக்காக ஹோலி கொண்டாடுவதை அமிதாப் பச்சன் குடும்பம்  தவிர்த்துள்ளது.
 
 
ஹோலியை மிகச்சிறப்பாகக் கொண்டாடும் ஒருசில பாலிவுட் நடிகர்களில் அமிதாப் பச்சனும் ஒருவர். நண்பர்கள் மற்றும்  உறவினர்களுடன் மிகப்பெரிய திருவிழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுவர். வருகிற திங்கள்கிழமை நாடு முழுவதும்  ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. 
 
ஆனால், ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நோயின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், ஐசியூ பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், இந்த வருடம் ஹோலி கொண்டாடுவதை தவிர்த்துள்ள அமிதாப் குடும்பம், பூஜையை  மட்டுமே செய்ய இருக்கின்றனர்.