பிரபல சீரியல் இயக்குனர் தவறி விழுந்து மரணம்!


Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 3 ஜனவரி 2017 (16:34 IST)
இந்தி தொலைக்காட்சிகளில் தொடர்களை இயக்கிய இயக்குனர் வாசிம் சபீர் மரணம் அடைந்தார். 

 
 
வீரா, கங்கா, தமன்னா, இஸ் பியார் கோ கியா நாம் தூன்.., ஏக் பார் ஃபிர்? ஆகிய இந்தி தொலைக்காட்சி தொடர்களை இயக்கியவர் வாசிம் சபீர். 
 
புத்தாண்டு அன்று மும்பையில் உள்ள தனது வீட்டில் வழுக்கி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் அடிபட்டது. உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
 
தலையில் அடிபட்ட அவருக்கு மூளையில் சேதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிர் இழந்தார். 
 
சபீரின் மரணத்தால் இந்தி தொலைக்காட்சி தொடர் கலைஞர்கள், இயக்குனர்கள் என பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :