1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 17 அக்டோபர் 2015 (20:16 IST)

தூம் 4 - மீண்டும் ஒன்றிணையும் ஹிர்த்திக், அமிதாப்...?

இந்தியின் வெற்றிகரமான சீரிஸ்களில் தூம் சீரிஸுக்குதான் முதலிடம். இதுவரை தூம் மூன்று பாகங்கள் வெளிவந்துள்ளன. மூன்றுமே ஹிட். ஒவ்வொருமுறையும் வெற்றியின் சதவீதமும் எகிறுகிறது.
 

 
2004 -இல் தூம் வெளியானது. இரண்டாவது பாகம் 2006 -இல். இந்த இரண்டாவது பாகத்தில் வில்லனாக ஹிர்த்திக் ரோஷன் நடித்திருந்தார். மூன்றாவதில், அமீர் கான்.
 
தூம் சீரிஸில் மாறாத கதாபாத்திரம் என்றால், போலீஸ் அதிகாரிகளாக வரும் அபிஷேக்பச்சனும், உதய் சோப்ராவும். மூன்று பாகங்களிலும் இவர்கள் நடித்தனர். நான்காவது பாகத்தில் ஹிர்த்திக் ரோஷன் மற்றும் அமிதாப்பச்சனை நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. 
 
மூன்றாவது பாகத்தின் அசுர வெற்றியை தாண்ட வேண்டுமென்றால் ஹிர்த்திக், அமிதாப் இருவரும் வேண்டும் என்று நினைக்கிறது, தயாரிப்பாளர் தரப்பு.
 
தப்பில்லையே.