1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Abimukatheesh
Last Updated : புதன், 12 ஜூலை 2017 (14:52 IST)

புதுமுக நடிகரை படுக்கைக்கு அழைத்த பெண் தயாரிப்பாளர்கள்

பட வாய்ப்புக்காக தன்னை ஏராளமானோர் படுகைக்கு அழைத்ததாக பாலிவுட் நடிகர் ஆஷிஷ் பிஸ்ட் தெரிவித்துள்ளார்.


 

 
புதுமுக நடிகர் ஆஷிஷ் பிஸ்ட் நடித்துள்ள பாலிவுட் படம் ஷாப் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில் வாய்ப்புக்காக சந்திந்த சிக்கல்களையும் துயரங்களையும் பற்றி கூறினார். அவர் கூறியதவது:-
 
பட வாய்ப்புக்காக படுகைக்கு அழைக்கும் பழக்கம் இன்றும் உள்ளது. நான் சினிமா வாய்ப்பு தேடி அழைந்த ஆரம்பத்தில் ஏராளமான தயாரிப்பாளர்கள் என்னை படுக்கைக்கு அழைத்தனர். நான் மும்பை வந்த புதிதில் பெண்கள் சிலர், வாய்ப்பு வேண்டுமென்றால் என்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று என்னை படுக்கைக்கு அழைத்தனர்.
 
சினிமாவில் அறிமுகமாகும் முன் மாடலிங் துறையில் இருந்தபோது ஒருமுறை வடிவமைப்பாளரும் நானும் அறையில் தனியாக இருந்தபோது என்னை வெளிப்படையாக படுக்கைக்கு அழைத்தார். மேலும் எனக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறினார். 
 
நான் எதற்கும் ஒத்துப்போகாமல் மறுத்துவிட்டேன். தற்போது எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த பட வாய்ப்பு கிடைத்தது என்றார்.
 
29 வயதுடைய ஆஷிஷ் துணிச்சலாக இப்படி வெளிப்படையாக பாலிவுட் சினிமா துறையில் நிலவும் சூழலை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.