Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கவர்ச்சியாக நடிப்பதை பயன்படுத்தி நிஜ வாழ்க்கைவில் படுக்கைக்கு அழைப்பது சரியில்லை: பிரியங்கா சோப்ரா

Sasikala| Last Modified சனி, 18 மார்ச் 2017 (11:01 IST)
ஆரம்பத்தில் சினிமாவுக்கு வந்தபோது இங்கு நிறைய கசப்பான அனுபாங்களே கிடைத்தன. பிறகு டைரக்டர்களில்  கேவலமானவர்களும் இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டேன்.

 
ஒரு படத்தில் என்னை ஒப்பந்தம் செய்த டைரக்டர் என்னிடம் வந்து, இப்படி நடித்தால் யாரும் பார்க்க மாட்டார்கள். உடம்பு  முழுவதும் தெரிகிற மாதிரி உடை அணிந்து ஆபாசமாக நடித்தால்தான் பார்ப்பார்கள். “நான் தைத்து தருகிற ஆடையை  போட்டுகொண்டு நடிக்க வா” என்று மோசமாக திட்டினார். அதிர்ச்சியடைந்த நான்  அந்த படத்துக்கு வாங்கிய அட்வான்ஸ்  தொகையை திருப்பி கொடுத்து விட்டு நடிக்க முடியாது என கூறி மறுத்து விட்டேன்.

 
சினிமாவில் நடிக்க வரும் பெண்கள் எதற்கும் தயாராக இருக்கிறார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். இந்த துறையில் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் வருபவர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு.  சில கதைக்கு கவர்ச்சி தேவையாக இருந்தால் அதில் நடிப்பதற்கு நான் ஆட்சேபிப்பது இல்லை. அதை வைத்து நிஜ  வாழ்க்கையிலும் படுக்கை அறைக்கு நான் தயாராக இருக்கிறேன் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது.
 
நான் சிறு வயதிலேயே இனவெறி தாக்குதலை சந்தித்து இருக்கிறேன். 8-வது வகுப்பு அமெரிக்காவில் லோவா பகுதியில் வசித்த எனது சித்தி வீட்டில் தங்கி 3 வருடங்கள் படித்தேன். அப்போது காலில் தெரியும் மச்சத்தை காட்டி கருப்பி என்று கேலி செய்து  என்னை அழ வைத்தார்கள். அதை எப்போதும் என்னால் மறக்க முடியாது.
 
ஆனால் இப்போது அவர்கள் கேலி செய்த அதே கால்கள் சம்பந்தப்பட்ட 11 உற்பத்தி பொருட்களுக்கு விளம்பர மாடலாக  இருக்கிறேன் என பிரிங்கா சோப்ரா கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :