1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Abimukatheesh
Last Updated : சனி, 17 செப்டம்பர் 2016 (15:35 IST)

நடிகை வித்யா பாலனை தாக்கிய டெங்கு

அண்மையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு மும்பை திரும்பிய பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.


 

 
பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் அண்மையில்தான் ‘ககானி 2’ படப்பிடிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவில் இருந்து மும்பை திரும்பினார்.
 
இந்தியாவில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் நடிகை வித்யா பாலன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது இரண்டு நாட்களுக்கு முன் உறுதிச் செய்யப்பட்டது. 
 
அதைத்தொடர்ந்து மருத்துவர் வித்யா பாலனுக்கு 10 முதல் 15 நாட்கள் வரை பெட் ரெஸ்ட் எடுத்துக்கொள்ள ஆலோசனை வழங்கியுள்ளார். 
 
இதையடுத்து பிரிஹான்மும்பை நகராட்சி கார்ப்பரேசனின் சுகாதார துறை நடிகர் ஷாகித் கபூர் வீட்டுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் அவர் வசிக்கும் வீட்டில் பயன்படுத்தாத நீச்சல் குளத்தில் கொசு உற்பத்தி செய்யும் இடம் ஆய்வு செய்யும் போது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
 
மேலும் வித்யா பாலன் வசிக்கும் அதே குடியிருப்பில் வேறொரு நபருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.