1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha
Last Updated : புதன், 16 அக்டோபர் 2019 (11:48 IST)

பிகில் படத்தை சிறுவர்கள் பார்க்கக்கூடாதா..? - சான்றிதழ் வழங்கிய தணிக்கைக்குழு!

தமிழ் சினிமாவின் சூப்பர் மாஸ் ஹீரோவான விஜய் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக பிகில் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், விஜய் அப்பா – மகன் என்று இரு வேடங்களில் நடித்துள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். உடன்  யோகி பாபு, கதிர், விவேக், இந்துஜா, ஜாக்கி ஷரூப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா, தேவதர்ஷினி, ரெபா மோகா ஜான், வர்ஷா போலம்மா, ஐஎம் விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர். 

 
ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தீபாவளி தினத்தில் சரவெடியாக வெடிக்கவுள்ள பிகில் திரைப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் நேற்று  சென்னை உயர்நீதிமன்றத்தில் செல்வா என்பவர், பிகில் கதை தன்னுடைய கதை என வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு குறித்தான விசாரணை இன்று நடைபெறவிருக்கிறது.


 
இந்நிலையில் சற்றுமுன் இப்படத்திற்கு தணிக்கை குழு யு\ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதற்கு முன் விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் மற்றும் சர்க்கார் இரண்டு படமும்  யு\ஏ சான்றிதழ் பெற்று சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.