”சல்மான் கானை கன்னத்தில் அறைந்தேன்” - சாமியார் பரபரப்பு பேட்டி


லெனின் அகத்தியநாடன்| Last Modified புதன், 11 ஜனவரி 2017 (20:11 IST)
பாலிவுட் நடிகர் சல்மான் கானின் கன்னத்தில் அறைந்ததாக சாமியார் ஸ்வாமி ஓம் தெரிவித்துள்ளார்.

 

பிக் பாஸ் என்ற சின்னத்திரை நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியின் 10வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் பிக் பாஸ் இல்லத்தில் இரண்டும் மாதங்கள் தங்க வைக்கப்படுவர். அவர்களின் செயல்கள் வீடியோ எடுத்து ஒளிபரப்பப்படும்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு பிரபல சாமியார் ஸ்வாமி ஓம் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது பிக் பாஸ் இல்லத்தில் ஸ்வாமி ஓம் தகாத செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், தனது சிறுநீரை சக போட்டியாளர்கள் மீது தெளித்துள்ளார். இதனால், ஸ்வாமி ஓம் பிக் பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதனையடுத்து செய்தி தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த ஸ்வாமி ஓம், ’பிக் பாஸ் இல்லத்தில் சல்மான் கானை கன்னத்தில் அறைந்தேன்’ என்று குறிப்பிட்டார். ஆனால், விளம்பரப் பிரியரான ஸ்வாமி ஓம் சல்மான் கானை அறைந்ததாக கூறுவதும் விளம்பரத்திற்கே என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், பிக் பாஸ் இல்லத்தை அடித்து நொறுக்குவேன் என்று தீ வைத்து கொளுத்துவேன் என்றும் ஸ்வாமி ஓம் கூறியுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :