1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Mahalakshmi
Last Updated : வியாழன், 19 மார்ச் 2015 (10:11 IST)

டல்லடிக்கும் அனுஷ்கா சர்மாவின் என்ஹெச்10

கிரிக்கெட்டில் வீராட் கோலி செஞ்சுரிகள் அடிக்க, திரையுலகில் அவரது காதலி அனுஷ்கா சர்மா கொஞ்சம் திணறவே செய்கிறார்.
அனுஷ்கா சர்மா நடித்த என்ஹெச்10 படம் சென்ற வாரம் வெளியானது. வெள்ளிக்கிழமை முதல் நாளில் இப்படம் இந்தியா முழுவதும் 3.35 கோடிகளை வசூலித்தது. இரண்டாவது நாள் வசூல் சற்று அதிகரித்தது, 4.50 கோடிகள். ஞாயிற்றுக்கிழமை மேலும் அதிகரித்து, 5.45 கோடிகள்.
 
வார நாள்களில் வசூல் மிகவும் குறைந்தது. திங்கள்கிழமை 2.08 கோடிகளும், செவ்வாய்கிழமை 1.92 கோடியும் மட்டுமே வசூலித்துள்ளது. முதல் ஐந்து தினங்களில் இந்திய வசூல் 17.30 கோடிகள். வெளிநாடுகளிலும் சேர்த்து, 20.67 கோடிகள்.
 
என்ஹெச்10 இனிமேல் பிக்கப்பாக வாய்ப்பில்லை என்பதே விமர்சகர்களின் கருத்து.