Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கோஹ்லியை கொண்டாடும் பாகிஸ்தானில் அனுஷ்காவுக்கு தடை

Anushka Sharma
Last Updated: வெள்ளி, 2 மார்ச் 2018 (17:47 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியை கொண்டாடும் பாகிஸ்தானில் அவரது மனைவி அனுஷ்கா சர்மா நடித்துள்ள திரைப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 
ரோசிட் ராய் இயக்கத்தில் அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகியுள்ள ‘பரி’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது மனைவியின் நடிப்பு சிறப்பாக இருந்தது என்று டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.
 
உலகம் முழுவதும் வெளியாகியுள்ள ‘பரி’ திரைப்படத்திற்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது. குரான் மற்றும் இந்து மந்திரங்களை கொண்டு மாயாஜாலம் செய்வதாக காட்சி அமைக்கப்பட்டுள்ளதால் தடை செய்வதாக பாகிஸ்தான் தணிக்கை சான்றிதழ் அமைப்பு தெரிவித்துள்ளது.
 
விராட் கோஹ்லியை கிரிக்கெட் ரசிகர்கள் பாகிஸ்தானில் கொண்டாடி வருகின்றனர். பாகிஸ்தானில் விராட் கோஹ்லி ஏராளமான ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :