புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (09:13 IST)

புதிதாக பிறந்த இரட்டை குழந்தையுடன் சுஷாந்தின் முன்னாள் காதலி!

பாலிவுட்டின் பிரபல பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்(34) கடந்த மாதம் இதே நாள் மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டது இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலிஸார் விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அவர் 6 மாதங்களுக்கு மேலாக மன அழுத்தத்தில் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாலிவுட்டில் நிலவும் வாரிசுகளின் ஆதிக்கமே சுஷாந்தின் தற்கொலைக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. அத்துடன் சுஷாந்தின் காதலி ரியா தான் சுஷாந்த்தை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. சுஷாந்தின் மரணத்திற்கு பலரும் நீதி கேட்டு வருகின்றனர். அதில் முக்கியமானவர் சுஷாந்தின் முன்னாள் காதலி அங்கிதா லோகாண்டே. சுஷாந்த் - அங்கிதா இருவரும் பவித்ர ரிஷ்தா நாடகத்தில் நடித்து  பெரும் புகழையும், ரசிகர் பட்டாளத்தையும் பெற்றனர். இவர்கள் 6 வருட காதலில் இருந்து பின்னர் பிரிந்துவிட்டனர்.

சுஷாந்த் இறந்ததில் இருந்து மிகுந்த சோகத்தில் இருந்து வந்த அங்கிதா தற்ப்போது மகிழ்ச்சியான பதிவு ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதில், 'புதிய வாழ்க்கை துவங்கியதன் காரணமாக எங்கள் குடும்பம் சந்தோஷத்தில் இருக்கிறத. இரட்டைக் குழந்தைகளான அபீர் மற்றும் அபீராவை வரவேற்கிறேன்'' என்று கேப்ஷன் கொடுத்து இரட்டை குழந்தைகளை கையில் ஏந்தியிருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியடைந்துள்ளார்.