வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Modified: திங்கள், 25 ஜூலை 2022 (14:28 IST)

தொடர்ந்து 5 ஆண்டுகளாக அக்‌ஷய் குமார் பெறும் கௌரவம்!

நடிகர் அக்‌ஷய் குமார் பாலிவுட்டின் அதிக வரி செலுத்தும் நபராக இருந்து வருகிறார்.

வருமானவரி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 24ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நேற்று வருமானவரி தினம் கொண்டாடப்பட்டது. இதையடுத்து பல்வேறு துறைகளில் அதிக வரி செலுத்துபவர்களுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

அந்த வகையில் பாலிவுட்டில் அதிக வரி செலுத்தும் நபராக அக்‌ஷய் குமார் கடந்த 5 ஆண்டுகளாக இருந்து வருவதால் அவருக்கு கௌரவ சான்றிதழ் வழங்கப்பட்டது. அவர் படப்பிடிப்புக்காக வெளிநாட்டில் இருப்பதால் அவருக்கு பதிலாக அவரது அணியினர் இந்த சான்றிதழைப் பெற்றுக்கொண்டனர். இது போலவே தமிழ் சினிமாவில் அதிக வரி செலுத்தும் நபராக ரஜினிகாந்த் அறிவிக்கப்பட்டு அவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.