Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஐஸ்வர்யா ராயின் தந்தை மரணம்: பாலிவுட் பிரபலங்கள் அஞ்சலி!


Sugapriya Prakash| Last Modified ஞாயிறு, 19 மார்ச் 2017 (13:28 IST)
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் உடல் நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

 
 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிருஷ்ணராஜ் ராயை காண அவரது மகளான ஐஸ்வர்யாராய் துபாயில் தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்து மும்பை விரைந்தார். அதேபோல் ஐஸ்வர்யாவின் கணவரான அபிஷேக் பச்சன், நியூயார்க்கில் தனது படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு மும்பை திரும்பினர். 
 
10 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் நேற்று மாலை உயிர் இழந்தார். இதையடுத்து அவருக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டது.
 
தந்தையை இழந்து வாடும் ஐஸ்வர்யா ராய்க்கு பாலிவுட் பிரபலங்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள். 


இதில் மேலும் படிக்கவும் :