பிள்ளைகளால் கைவிடப்பட்ட நடிகை மரணம்

hos
Last Modified ஞாயிறு, 27 மே 2018 (11:03 IST)
பழம்பெரும் இந்தி நடிகை கீதா கபூர் பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி திரையுலகில் ஒரு காலத்தில் பிரபலமானவர் தான் நடிகை கீதா கபூர்(57). இவர் பாகியா என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
 
இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவரை, அவரது மகன் மும்பை கோரேகாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்தார். பின் மருத்துவமனை பில் செலுத்தாமலே அங்கு இருந்து சென்றுவிட்டார். கீதாவின் மகளும் தனது அம்மாவை சென்று பார்க்கவில்லை.
act
கீதாவிற்கு யாருமே உதவி செய்யாத நிலையில், திரைத்துறையினர் அவருக்கு உதவி செய்தனர். முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டிருந்த கீதாவிற்கு நேற்று உடல்நிலை சரியல்லாமல் போனது.
 
இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு கீதா கபூர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :