லிங்கம் வளரும் மகாகாலேஸ்வர் கோயில்!
பக்தர்களின் நலன் காக்க அவர்கள் முன் கடவுள் தோன்றுவாரா? மனிதர்களைப் போல ஒரு சிலை வளர முடியுமா? இப்படிப்பட்ட அதிசயங்கள் நிஜ வாழ்வில் நடப்பதுண்டா? இந்தக் கேள்விகளுக்கு யாராலும் பதிலளிக்க முடியாது. ஆனால் ஒவ்வொருவரும் இப்படிப்பட்ட இயற்கைக்கும் அப்பாற்பட்ட ஆச்சரியங்களை சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். சில நேரங்களில் கடவுளை மரங்களில் பார்க்கிறார்கள், சில நேரங்களில் இறைவனுக்கு அளிக்கப்படும் காணிக்கை அவர்கள் கண் முன்னாலேயே மறைந்துவிடுகிறது. நம்பினால் நம்புங்கள் தொடரில் இதைப் போல ஆச்சரியமான ஒரு கோயிலிற்கு அழைத்துச் செல்கின்றோம். இந்தக் கோயிலைப் பற்றிய கதையை படியுங்கள். அதன்பிறகு இதனை நம்புவதா? அல்லது மூடநம்பிக்கை என்று புறக்கணிப்பதா? என்பதனை முடிவு செய்யுங்கள். மத்தியப் பிரதேச மாநிலத்தில் தேவாஸ் நகரில் உள்ள மகாகலேஸ்வர் கோயிலை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். பல ஆயிரம் பக்தர்கள் பற்றுறுதி கொண்ட கோயில் இது. இக்கோயிலில் அமைந்துள்ள சிவலிங்கம் சுயமாகத் தோன்றியது என்றும், அது தொடர்ந்து வளர்ந்து வருவதாகவும் இந்நகரில் வாழும் பக்தர்களும், கோயிலிற்கு அடிக்கடி வருபவர்களும் கூறுகின்றனர். அவர்கள் கூறுவது உண்மையான என்பதனை அறிய அங்கு சென்றோம்.
நாங்கள் அந்தக் கோயிலிற்குச் சென்றபோது சில பக்தர்கள் சிவலிங்கத்திற்கு வழிபாடு செய்து கொண்டிருந்தனர். தங்களுடைய எதிர்பார்ப்புக்களை மகாகாலேஸ்வர் நிறைவேற்றுவதாகக் கூறுகின்றனர். நாம் ஏற்கனவே அறிமுகப்படுத்திய உஜ்ஜைன் நகரில் உள்ள மகாகாள் கோயிலில் இருந்த சிவலிங்கத்தைப் போன்றே இந்தக் கோயிலின் சிவலிங்கமும் இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவெனில் மகாகாள் கோயிலில் உள்ள சிவலிங்கம் சுருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்தத் திருக்கோயிலில் உள்ள சிவலிங்கம் வளர்ந்துக் கொண்டிருக்கிறது!இக்கோயிலிற்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வரும் ராதாகிருஷ்ணன் என்பவர், தான் சிறு பிள்ளையாய் இருந்த காலம் முதல் இக்கோயிலிற்கு வருவதாகவும், சிவலிங்கத்தின் உயரம் அதிகரித்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். ஒவ்வொரு சிவராத்தி அன்றும் லிங்கம் வளர்கிறது என்று கூறுகின்றனர். ஆனால், அந்த வளர்ச்சி மிகக் குறைவாக இருப்பதால் நான்கைந்து ஆண்டுகளுக்குப் பிறகே அதனை உணர முடியும் என்று கூறுகின்றனர். இந்த லிங்கம் சுயம்புவாக தோன்றியது என்பதற்கு ஒரு புராணம் உள்ளது.
ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் இந்த தேவாஸ் நகரம் ஒரு கிராமமாக இருந்தது. அப்பொழுதெல்லாம் இக்கிராமத்திற்கு எந்தத் தகவல் தொடர்பும் இல்லை. இங்கு வாழ்ந்த கெளரி சங்கர் என்கின்ற பூசாரி சிவபெருமானின் தீவிர பக்தராவார். கோயிலிற்குச் சென்று சிவபெருமானை வணங்கிய பின்னரே எதையும் சாப்பிடுவார். ஒரு நாள் அவரால் கோயிலிற்குச் செல்ல முடியாத அளவிற்கு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மழை விடுவதாகத் தெரியவில்லை. கோயிலிற்குச் சென்று இறைவனை வழிபட முடியாதோ என்ற வருத்தத்தில் தன் கையில் இருந்த உணவை தண்ணீரில் விட்டுவிட்டார். அவர் உணவு உட்கொள்ளாமல் பட்டினி கிடந்ததால் மரணத்தின் விளிம்பில் இருந்த அவர் முன்பு சிவபெருமான் தோன்றினார். நீ விரும்புவதைக் கேள் என்றார். நான் ஒவ்வொரு நாளும் உனை இப்படி தரிசிக்க வேண்டும் என்று கெளரிசங்கர் வேண்டினார். அவ்வாறே ஆகட்டும் என்று கூறிய சிவபெருமான், எப்பொழுதெல்லாம் நீ 5 வில்வ இலைகளைக் கொண்டு பிரார்த்திக்கின்றாயோ, அப்பொழுது அந்த இடத்தில் நான் தோன்றுவேன் என்று கூறினார்.
இந்நிகழ்விற்குப் பின்னர் இந்தக் கோயில் உள்ள இடத்தில் சிவபெருமான் தோன்றினார். அந்த இடத்தில் தேவாஸ் கிராம மக்கள் கோயிலை எழுப்பினர். அதன்பிறகு இறைவன் காட்சியளித்த அந்த இடத்தில் தோன்றிய சிவலிங்கம் தொடர்ந்து வளர்வதைக் கண்டனர். இக்கோயிலின் நிர்வாகக் குழுவின் தலைவராக உள்ள பீம்சிங் என்பவர், சிவலிங்கம் வளர்வதை தான் கவனித்து வருவதாகக் கூறுகிறார். சிவலிங்கத்தின் பழைய புகைப்படங்களை அதற்கு ஆதாரமாக எங்களுக்குக் காட்டினார். அந்தப் படங்களில் இப்பொழுது உள்ளதை விட சிவலிங்கம் சிறியதாக இருந்தது. ஆனால், புகைப்படம் மட்டுமே சிவலிங்கம் வளர்வதற்கு ஆதாரமாகிவிட முடியாது. அறியாத மக்கள் தங்களுடைய எண்ணங்கள் நிறைவேற வேண்டும் என்று விரும்பும் அறியாத மக்களை ஏமாற்றுவதற்காகக் கூட இப்படிப்பட்ட தந்திரங்களைச் செய்வதுண்டு. அதே நேரத்தில், புவியியல் ரீதியான சில செயல்பாடுகளால் லிங்கம் வளர்வதற்கான சாத்தியம் கூட உள்ளது என்று விஞ்ஞானிகளும் கூறுகின்றனர். அப்படிப்பட்ட செயல்பாடுகள் நமது புவியின் மேற்பகுதியில் ஏற்படுவதாகவும் கூறிகின்றனர். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். எங்களுக்கு எழுதுங்கள்.