பக்கவாத நோய் தாக்கினால் அதனை குணப்படுத்துவது ஒரு பெரிய போராட்டமாகும் . ஏராளமாக பணத்தைச் செலவு செய்து ஏகப்பட்ட பரிசோதனைகள் என்று உடலை வருத்திய பின்னரும் முழுமையாக குணமடையாமல் இருப்பவர்களை நாம் நம் அனுபவத்தில் கண்டிருக்கிறோம்.
ஆனால் இது போன்ற தீர்க்க முடியாத வியாதிகளை தீர்க்க சிலர் கோயிலுக்கு நேர்ந்து கொள்வது, வேண்டிக்கொள்வது, காணிக்கை செலுத்துவது போன்றவற்றிற்க்கும் நம் நாட்டில் பஞ்சமில்லை. நமது நாட்டில் இதுபோன்ற நம்பிக்கைகள் ஏராளம் ஏராளம்... இந்த நம்பிக்கைகள் எல்லாமே பொய்த்துப்போவதும் இல்லை என்றே கூறலாம்.
பக்கவாத நோயை தீர்க்கும் ஒரு புனிதக் குளத்தை பற்றி நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மத்தியப் பிரதேசத்தின் நீமாச் நகருக்கு 50 கி.மீ. தொலைவில் பாதவ மாதா கோயில் என்ற ஒரு திருத்தலம் உள்ளது. இந்த கோயிலில் பாவ்தி என்ற குட்டை போன்ற ஒரு குளம் உள்ளது. இதில் நீராடினால் பக்கவாதம் உள்ளிட்ட நரம்புத் தளர்ச்சி நோய்கள் குணமாவதாக அப்பகுதி பக்தர்கள் கூறுகின்றனர்.
webdunia photo
WD
இந்த கோயிலின் தலைமை நிர்வாகி திரு. விஷ்வனாத் காலோட் என்பவரிடம் இது குறித்து கேட்டபோது, இந்த பாதவமாதா கோயில் பீல் என்ற பழங்குடிச் சமுதாயத்தினரின் நம்பிக்கையால் உருவான கோயில் இதன் தலைமை பூசாரி கூட இந்த பழங்குடிப் பிரிவைச் சேர்ந்தவர் என்று கூறினார். இந்த கோயிலில் பல அதிசயிக்கத்தக்க சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாக தெரிவித்தார். அதில் குறிப்பாக பாவ்தி என்ற குளத்தில் குளிப்பவர்கள் பக்கவாதத்திலிருந்து குணமடைவதும் நடந்திருக்கிறது என்றார்.
webdunia photo
WD
நவராத்திரித் திருவிழாவின் போது இக்கோயிலிற்கு ஏராளமான பக்தர்கள் வந்து தங்களது காணிக்கைகளை செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றி காரிய சித்தி அடைந்திருக்கிறார்கள். இது போன்று அதிகமாக கூட்டம் வர வர அங்கு நிர்வாக முறைகேடு நிகழந்தது. இதனால் இந்த குளத்தில் குளிப்பது தடைச் செய்யப்பட்டது. ஆனால் பெரிய பெரிய தொட்டிகளில் இந்த புனித நீர் நிரப்பப்பட்டு ஆண்கள் பெண்கள் குளியலறைக்கு கொண்டு செல்லப்பட்டது என்று அந்த நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.
புனித நீராடல் பக்கவாதத்தை குணப்படுத்தியதா என்பதை அறிய அம்பாராம்ஜி என்ற பக்தரைச் சந்தித்தோம். அவர் கூறினார், " எழுந்து நடக்கமுடியாத அளவிற்கு பக்கவாத நோயால் 3 ஆண்டுகள் அவதியுற்று வந்தேன். இந்த கோயிலிற்கு வந்து 9 நாட்கள் இந்த புனித தீர்த்தத்தில் நீராடியதால் கொஞ்சம் குணமானது. இப்போது தொடர்ந்து இங்கு நீராடி வருவதால் பிறர் உதவியின்றி என்னால் எழுந்து நிற்க முடிகிறது. வரும் சனி அல்லது ஞாயிற்றுக் கிழமை வாக்கில் மாதாவின் அருளால் முழுவதும் குணமடைந்து விடுவேன்" என்று கூறியபோது அவர் கண்களில் பனித்துளிகளாய் கண்ணீர் தளும்பியது.
webdunia photo
WD
ஒரு அம்பாராம்ஜி மட்டுமல்ல, எண்ணற்ற பக்தர்கள் இங்கு வந்த பிறகு தங்களின் தீராத பிரச்சனைகளெல்லாம் தீருவதாக தெரிவித்துள்ளனர்.
அம்பாராம்ஜி போன்று அசோக் என்ற நபரும் இந்த கோயிலுக்கு பக்கவாத சிகிச்சைக்காக சமீபத்தில் வந்துள்ளார். இந்த குளத்தில் புனித நீராடியதால் தற்போது அவரால் எழுந்து நிற்க முடிகிறது என்று அசோக்கின் பெற்றோர்கள் கூறினார்கள்.
webdunia photo
WD
இப்பகுதியில் கடை வைத்திருக்கும் ராதே ஷியாம் இதுபற்றி நம்மிடம் கூறுகையில், இந்த புனித நீரை விஞ்ஞானிகள் சோதனை செய்து பார்த்தனர் என்றும் இந்த நீரில் உள்ள சில ரசாயனங்கள் உடம்பில் உள்ள ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் இந்த நீர் மருத்துவ சக்தி பெற்று பக்கவாதத்தை குணப்படுத்துகிறது என்று அவர்கள் கண்டுபிடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஒவ்வொரு சனிக்கிழமை இரவும், ஞாயிற்றுக் கிழமைகளிலும் பாதவ மாதா இந்த கோயில் வளாகத்திற்கு வருகை தந்து பக்தர்களுக்கு சிகிச்சை அளிப்பதாக ஒரு ஐதீகம் நிலவுகிறது. இதானல் இக்கோயிலில் இரவு தங்குவது என்பது பிரபலமடைந்துள்ளது. பாதவ மாதாவிற்கு கோழி, ஆடுகளை பலி கொடுப்பதும் இங்கு வழக்கம். ஆரத்தியின் போது ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மாதாவின் ஆசியை பெறுகின்றனர்.
webdunia photo
WD
இந்த அதிசய புனித நீரின் மருத்துவ சக்திகள் பற்றிய நிஜமான காரணத்தை அறிய பல ஆய்வுகளும் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த புனித நீரில் நீராடியும் குணமடையாத விதிவிலக்குகளும் உண்டு.
இந்த கோயில் 700 ஆண்டு கால பழமை வாய்ந்தது என்று ஒரு சாரார் கூறுகின்றனர். எது எப்படியிருப்பினும் இந்த விஞ்ஞான யுகத்தில் மருத்துவத்தால் சாதிக்க முடியாததை இந்த கோயில் குளம் சாதிக்கிறது என்றால் இன்னமும் பிரபஞ்சத்தில் அவிழ்க்கமுடியாத புதிர்கள் பலவுள்ளன என்றுதானே பொருள்?