வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  4. »
  5. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : திங்கள், 14 ஏப்ரல் 2014 (22:21 IST)

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: ஒரு பார்வை

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போலவே கால்பந்து விளையாட்டுக்கென இந்தியன் சூப்பர் லீக் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

அதில் எட்டு நகர அணிகளுக்கான உரிமை குறித்த ஏலம் நேற்று முடிவடைந்து உரிமையாளர்கள் தீர்மானிக்கப்பட்டனர். கிரிக்கெட் பிரபலங்களும் இதில் அணிகளை வாங்கியுள்ளனர்.
 
சச்சின் டெண்டூல்கர் கொச்சி அணியையும் சவுரவ் கங்கூலி கொல்கத்தா அணியையும் வேறு சிலருடன் இணைந்து வாங்கியுள்ளனர்.
 
இந்த முன்னெடுப்பில் டேவிட் பெக்கம், தியர் ஆன்ரி போன்ற பல பன்னாட்டு வீரர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர். 
 
பிரபலங்களைக் கொண்டு வருவதால் மட்டுமே கால்பந்து விளையாட்டு இந்தியாவில் பெரும் வெற்றி அடையும் எனக் கூற முடியாது என்கிறார் இந்திய அணிக்காக எட்டு ஆண்டுகள் விளையாடியுள்ள சபீர் பாஷா.
 
ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவிலுள்ள நாடுகளின் கால்பந்து சங்கங்களில் எட்டு வயது முதல் சிறார்களை எப்படி ஈடுபடுத்தி கால்பந்து முன்னெடுப்புகளைச் செய்கிறார்களோ அதுபோல் செய்தால் மட்டுமே இந்தியாவில் கால்பந்து விளையாட்டுக்கு எதிர்காலம் இருக்கும் என அவர் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
 
எனினும் இந்த இந்த கால்பந்து லீக் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று எனவும், ஓரிரு வருடங்களுக்கு பிறகு உலகின் பல பிரபலங்கள் இந்திய சூப்பர் லீக் கால்பந்து போட்டிகளில் ஆடக் கூடிய வாய்ப்பு ஏற்படலாம் எனவும் சபீர் பாஷா கூறுகிறார்.