வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Suresh
Last Updated : வியாழன், 1 அக்டோபர் 2015 (13:01 IST)

எச்ஐவி தொற்றுக்கான மருத்துவ வழிகாட்டுதலில் மாற்றம்

உலக சுகாதார நிறுவனம் எச்ஐவி தொடர்பான தனது மருத்துவ வழிகாட்டு நெறிமுறைகளை மாற்றி அமைத்துள்ளது.


 

 
இதன்படி எந்தவொரு நோயாளிக்கும் இந்த வைரஸ் இருப்பது பரிசோதனையில் தெரிய வருமாயின் அவருக்கு உடனடியாக நோய் எதிர்ப்பு மருத்துகள் அளிக்கப்பட வேண்டும் என புதிய வழிகாட்டு நெறிமுறை கூறுகிறது.
எச்ஐவி இருப்பதாக கண்டறியப்பட்டவுடன் மருந்து கொடுக்க ஆரம்பித்தால், அது அந்த நபர்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்கும், மற்றவர்களுக்கு அது பரவுவதை குறைக்கவும் வாய்ப்பு ஏற்படும் என்று சர்வதேச சுகாதார அமைப்பு கூறுகிறது. அந்த வைரஸே எய்ட்ஸ் நோய் வருவதற்கு காரணமாக உள்ளது.
 
முன்னர் இருந்த வழிகாட்டுதலின்படி எச் ஐவி தாக்குதல் ஏற்பட்டால், எந்த அளவுக்கு மனிதர்கள் அதை எதிர்த்து தாக்குப்பிடிக்க முடியும் என்பதைக் கண்டறியும் வரை மருத்துவர்கள் காத்திருக்க அறிவுரை வழங்கப்பட்டிருந்தது.
 
புதிய வழிமுறைகளை அடுத்து உலகளவில் எச்ஐவி தொற்றுக்காக தற்போது மருத்துவம் பெற்றுவருவோரின் எண்ணிக்கை 28 மில்லியனிலிருந்து 37 மில்லியனாக உயர்ந்துள்ளது.