1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 16 மே 2015 (18:55 IST)

தெற்கு சீனக்கடலில் சீனாவின் 'இராணுவ மையங்கள்': அமெரிக்கா கவலை

தெற்கு சீனக்கடலில் சர்ச்சைக்குரிய தீவுக்கூட்டங்கள் உள்ள பகுதியில் சீனா மேற்கொண்டுவரும் நிலக் கையகப்படுத்தலின் அளவும் வேகமும் கவலை தருவதாக உள்ளதென அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி கூறுகின்றார்.
 

 
குறித்த பகுதியில் பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்குமாறும் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜான் கெர்ரி கூறியுள்ளார்.
 
ஆனால், கெர்ரிக்கு அருகில் அமர்ந்திருந்த சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ, அமெரிக்காவின் கவலையை நிராகரித்தார்.
 
சர்ச்சகைகுரிய கடற்பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் சீனாவின் இறையாண்மைக்கு உட்பட்டே நடப்பதாக சீன வெளியுறவு அமைச்சர் கூறிவிட்டார்.
 
கடந்த ஆண்டில் மட்டும் சீனா சுமார் 800 ஹெக்டேர் (2000 ஏக்கர்கள்) நிலத்தை கையகப்படுத்தியுள்ளதாக அமெரிக்கா கூறுகின்றது.
 
அங்கு சீனா இராணுவ மையங்களை அமைத்துவருவதாகவும் அமெரிக்கா அஞ்சுகின்றது.