வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 14 ஜூன் 2016 (12:36 IST)

யானைக்குட்டி வைத்திருந்த முன்னாள் நீதிபதிபதிக்கு மீண்டும் சிக்கல்

யானைக்குட்டி விவகாரத்தில் சிக்கியுள்ள நீதிபதி திலின கமகேவை விளக்க மறியலில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்குமாறு அரசு தலைமை வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
 

 
அண்மையில், முறையான அனுமதிப் பத்திரமின்றி யானைக்குட்டி ஒன்றை தன் வசம் வைத்திருந்த விவகாரத்தில் கொழும்பு நீதிமன்ற கூடுதல் நீதிபதி திலின கமகேவை பிணையின் கீழ் விடுதலை செய்வதற்கு நுகேகொட மஜிஸ்ட்ரேட் நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
 
இந்த பிணை உத்தரவு சட்ட விரோதமானது என்று தீர்ப்பளிக்குமாறு கோரி அரசு தலைமை வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
 
தொடர்ந்து, தீர்ப்பை அறிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி, திலின கமகேவை பிணையின் கீழ் விடுதலை செய்த நுகேகொட மாஜிஸ்ட்ரேட் நீதிபதியின் தீர்ப்புக்கு தடைவிதித்து உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார்.
 
மேலும், முன்னாள் நீதிபதி திலின கமகேவை விளக்க மறியலில் வைக்கும்படி விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் சம்பந்தமாக, எதிர்வரும் 22 தேதி விசாரிக்கப்படும் என கூறிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, பின்னர் அது தொடர்பாக தீர்ப்பு ஒன்று வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.