செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (00:41 IST)

இந்தியாவுடனான சரக்கு போக்குவரத்து தொடர்புகளை நிறுத்தியது தாலிபன்

பாகிஸ்தானின் பெரும்பாலான மலைப்பிரதேச சாலைகள் வழியாக ஆப்கானிஸ்தானுக்குள் இந்திய வாகனங்கள் சென்று வந்தன.
 
இந்த நிலையில், பாகிஸ்தானை இணைக்கும் தமது அனைத்து எல்லைகளையும் தாலிபன் மூடி விட்டது. இதனால், வழிநெடுகிலும் அந்த நாட்டுடன் வர்த்தகம் மேற்கொண்டு வந்த சரக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
 
ஆப்கானிஸ்தானில் இருந்து தரைவிரிப்பான்கள், படுக்கை விரிப்பான்கள், உலர் பழ வகைகள், மருத்துவ குணமுள்ள மூலிகைகள் போன்றவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம்.
 
அவை அந்த நாட்டின் 20 சதவீத உள்நாட்டு மொத்த உற்பத்தி மூலம் வருவாய் ஈட்டும் ஆதாரங்களாக விளங்கின. அந்த நாட்டிடம் இருந்து பாகிஸ்தான் 48 சதவீத பொருட்களையும் இந்தியா 19 சதவீத பொருட்களையும் பெற்று வந்தன. ரஷ்யா, துருக்கி, இராக்கும் சில வகை பொருட்களை இறக்குமதி செய்து வந்தன.