வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Annakannan
Last Modified: திங்கள், 20 அக்டோபர் 2014 (17:50 IST)

'முதலில் உடலுறவு கொண்டவை மீன்களே' - விஞ்ஞானிகள்

உயிரினங்களில் பாலுறவின் தொடக்கத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

 
38 கோடியே 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்த ''மைக்ரோபிரக்கியஸ் டிக்கி'' (Microbrachius dicki) என்னும் வகையிலான மீன்களே, முட்டை போடுவதற்குப் பதிலாக முதன் முதலில் பாலுறவின் மூலம் இனப்பெருக்கம் செய்ததாக சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒன்று கூறியுள்ளது.
 
இந்த வகை மீன்களில் ஆண் மீன்களில் காணப்படும் ''L'' போன்ற ஒரு பிற்சேர்க்கை, பெண் மீனின் பின்பகுதியில் எலும்பு போன்ற ஒரு அமைப்புடன் இணைந்துகொள்ளுமாம்.
 
ஆனால், மீன் பின்னர் மீண்டும் முட்டை போடும் முறைக்கு மாறிவிட்டதாம்.
 
ஆனால், அதன் பின்னர் மீண்டும் 50 லட்சம் ஆண்டுகளின் பின்னர் சுறா போன்றவற்றின் மூலம், மீண்டும் உடலுறவு மூலம் இனப்பெருக்க செய்யும் தன்மை வந்துவிட்டதாம்.