வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 11 பிப்ரவரி 2016 (17:03 IST)

எஸ்விஎஸ் கல்லூரி : தொடரும் பிரச்சினைகள்

எஸ்விஎஸ் கல்லூரி : தொடரும் பிரச்சினைகள்

தமிழகத்திலுள்ள எஸ்விஎஸ் கல்லூரி, அங்கு பயின்ற மூன்று மாணவிகளின் மரணத்தை அடுத்து மூடப்பட்ட நிலையில், அங்கு பயின்ற மாணவர்களை வேறு கல்லூரிகளுக்கு மாற்றும் நடவடிக்கை முழுமையாக பலனளிக்கவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
 


பல போலி வாக்குறுதிகளை கொடுத்து மாணவர்களைச் சேர்த்ததாக எஸ்விஎஸ் கல்லூரி மீது புகார்
 
அங்கு பயின்ற மாணவர்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு மறுகலந்தாய்வு என்பது முழுமையான பலனளிக்கவில்லை என மாணவர்களின் பெற்றோர் கூறுகின்றனர்.
 
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு மறுகலந்தாய்வு இன்று புதன்கிழமை சென்னை அரசு யோகா மற்றும் நேச்சுரோபதி கல்லூரியில்ன் நடைபெற்றது.
 
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்க பாதிக்கப்பட்ட மாணவர்கள் நூற்றுகணக்கானோர் அவர்கள் பெற்றோருடன் வந்திருந்தனர்.
 
ஆனால் எஸ்.வி.எஸ். கல்லூரியில் சுயநிதி பிரிவில் படித்த மாணவர்கள், இந்த மறுகலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை என்று கூறிய மாணவர்களின் பெற்றோர், அங்கே கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.
 


பொட்டல்காட்டில் கல்லூரி கட்டப்பட்டுள்ளது. அங்கு போதிய வசதிகள் இல்லை
 
இன்றைய கலந்தாய்வில், இரண்டாமாண்டு படிப்பைத் தொடர வேண்டிய மாணவர்களுக்கும் கூட, மீண்டும் முதலாம் ஆண்டு படிப்பிற்கான வாய்ப்பே வழங்கப்பட்டுள்ளது என சில மாணவர்கள் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தனர்.
 
அந்தக் கல்லூரியில் பல பிரச்சினைகள் இருந்தன என்பதை தமிழக முதல்வரின் கவனத்துக்கும், நீதிமன்றத்துக்கும் கொண்டு சென்றபோதும் அது பலனளிக்கவில்லை எனவும் மாணவி ஒருவரின் தந்தை கூறுகிறார்.
 
மூன்று மாணவிகளின் மரணத்துக்கு பிறகே அக்கல்லூரியில் இடம்பெற்ற பல விஷயங்கள் வெளியே தெரியவந்துள்ளது என பல்தரப்பினர் கூறுகின்றனர்.