புதன், 5 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 18 பிப்ரவரி 2019 (09:16 IST)

ஜப்பானில் குச்சிகளை தேடும் போட்டி: நிர்வாணமாக போராடும் ஆண்கள்

ஜப்பானில் நடந்த பாரம்பரிய திருவிழா ஒன்றில், கிட்டத்தட்ட நிர்வாணமாக இருந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் இரண்டு புனித குச்சிகளை தேடும் போட்டியில் ஈடுபட்டனர்.
 
ஜப்பானின் ஒகாயாமாவிலுள்ள பிரபல புத்த மத ஆலயம் ஒன்றில் நடைபெற்ற இந்த திருவிழாவில், அரைக்கச்சைகளை அணிந்திருந்துக்கொண்டு சுமார் 10,000 ஆண்கள் பங்கேற்றிருப்பர் என்று கருதப்படுகிறது.
 
ஒரு குறிப்பிட்ட இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் புனித குச்சிகளை எடுக்க செல்வதற்கு முன், போட்டியில் பங்கேற்கும் அனைவரும் தண்ணீரில் மூழ்கி எழுகின்றனர்.
 
'சிங்கி' என்றழைக்கப்படும் சுமார் 20 செ.மீ நீளமுள்ள புனித குச்சிகளை கண்டெடுப்பவர் அந்த ஆண்டின் அதிர்ஷ்ட நபராக கருதப்படுவார்.