வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : சனி, 30 ஜூலை 2022 (18:28 IST)

இலங்கை பொருளாதாரம் : அடுத்த 6 மாதங்களில் வரிசைகட்டி நிற்கும் பிரச்னைகள்

Sri Lanka
ஸ்திரமற்ற அரசியல் சூழல், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை, வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகளில் இலங்கை திடமான முடிவை எடுக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. எனவே, இலங்கைக்கு எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் முக்கியமானவை என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.


இதேவேளை, சீனாவின் நன்மைகளற்ற திட்டங்கள் மற்றும் கடன் கொடுக்கல் வாங்கல்களே, இலங்கை பாதாளத்திற்கு வீழ்வதற்கு காரணம் என அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி தொடர்வதுடன், வட்டி வீதம் அதிகரிக்கின்றமையினால், சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்களை நடத்தி செல்வது சவாலாக காணப்படுகின்றது.

இயன்றவரை சர்வ பொருளாதார கொள்கை வரைவொன்று நடைமுறைப்படுத்தப்படும் வரை, இலங்கைக்கான புதிய நிதி வசதிகளை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில்லை என உலக வங்கி ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

இந்த நிலைமையின் கீழ், வர்த்தக நடவடிக்கைகளை நடத்தி செல்வது சிரமமாகியுள்ளதுடன், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தொழில் வாய்ப்புக்களை இழப்பதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

புதிய நிதி வசதிகள் கிடையாது - உலக வங்கி

கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அதனூடாக இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் தொடர்பில் அவதானத்துடன் இருப்பதாக உலக வங்கி குறிப்பிடுகின்றது.

அதற்காக பொருளாதார உறுதிப்படுத்தல் தொடர்பில் அவதானம் செலுத்தி, அழமான கட்டமைப்பு திருத்தமொன்று அவசியமாகின்றது என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.