1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 30 ஜூன் 2015 (20:23 IST)

சிறுமிகளை எரித்துக் கொன்ற தெற்கு சூடான் இராணுவம்

தெற்கு சூடான் இராணுவத்தினர் டஜன் கணக்கான சிறுமிகளை குழுவாக பாலியல் வல்லுறவு செய்து பின்னர் அவர்களின் வீடுகளுக்குள் தள்ளி உயிருடன் எரியூட்டிக் கொன்றதாக ஐநா சபை தெரிவித்திருக்கிறது.
 

 
தெற்கு சூடான் அரசாங்கத்திற்கும், அரசுக்கு எதிரான கிளர்ச்சிப்படைகளுக்கும் இடையே சண்டை உக்கிரமாக நடைபெற்ற அந்த நாட்டின் வடகிழக்குப் பிராந்தியத்திலேயே இத்தகைய துஷ்பிரயோகங்கள் நடந்துள்ளதாக அங்குள்ள ஐநா அலுவலகம் தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
கிளர்ச்சிக்குழுவினரின் இருப்பிடம் குறித்த தகவலை தெரிவிக்கும்படி ஒரு பெண்ணை நிர்பந்திப்பதற்காக கனன்று கொண்டிருந்த நிலக்கரி அவரது கைகளில் ஏந்தும்படி செய்யப்பட்டதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கிளர்ச்சியாளர்கள் சிறுவர்களை போராட்டத்தில் சேர்த்துக் கொண்டதாகவும், பாலியல் வல்லுறவு புரிந்ததாகவும் கொலைகள் செய்ததாகவும் ஐநா குற்றம் சாட்டியிருக்கிறது.
 
ஐநாவின் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இதுவரை எந்த தரப்பும் பதிலளிக்கவில்லை.