வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 21 அக்டோபர் 2014 (17:10 IST)

தடகள வீரர் ஆஸ்கர் பிஸ்டொரியசுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை

தென் ஆப்ரிக்க தடகள வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ் தனது தோழி ரீவா ஸ்டீன்கேம்ப்பை கடந்த ஆண்டு கொன்ற குற்றச்சாட்டு தொடர்பாக ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
 
அவர் வேண்டுமென்றே ரீவாவைக் கொலை செய்யவில்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும், கவனக்குறைவாக ரீவாவை சுட்டுக்கொன்ற குற்றம் புரிந்ததாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
 
ஆஸ்கர் பிஸ்டோரியசின் பிரிட்டோரியா இல்லத்தில் குளியலறையில் இருந்த ரீவாவை அந்த அறைக்கதவு ஊடாக பிஸ்டோரியஸ் சுட்டுக்கொன்றார். இது தொடர்பாக துப்பாக்கி வைத்திருத்தல் பற்றிய மற்றொரு குற்றச்சாட்டில் அவருக்கு மூன்றாண்டு இடை நிறுத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
 
குற்றங்களுக்காகப் பழிவாங்கும் நீதி, இது போன்ற குற்றங்களை எதிர்காலத்தில் தடுப்பது, மற்றும் குற்றம் புரிந்தவர்களுக்கு மறுவாழ்வு தருவது ஆகியவைகளுக்கு இடையே ஒரு சமாந்திரமான நிலையை எடுக்க தான் முயன்றதாக நீதிபதி குறிப்பிட்டிந்தார்.
 
பிஸ்டோரியஸ் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்காலத்தில் ஆறில் ஒரு பங்கை அவர் கழித்தபின்னர்தான் அவருக்கு பரோலில் விடுதலை குறித்து பரிசீலிக்கப்படும்.