வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 14 பிப்ரவரி 2016 (21:02 IST)

ஐஎஸ் அமைப்பு மீதான தாக்குதலை தீவிரப்படுத்தும் சவுதி

சிரியாவில் இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக் கொள்ளும் அமைப்பின் மீதான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படுவதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது.
 

 
அவ்வகையில் துருக்கியிலுள்ள ஒரு தளத்துக்கு தமது போர் விமானங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா கூறியுள்ளது.
 
இதுவரை காலமும் அந்த அமைப்பின் மீதான அனைத்து தாக்குதல்களும் சவுதி விமானப்படைத் தளங்களில் இருந்தே நடத்தப்பட்டன.
 
தமது விமானங்களை துருக்கிக்கு நகர்த்துவது, வடக்கு சிரியாவில் தாம் தாக்கத் திட்டமிட்டுள்ள இலக்குகளுக்கு அருகில் செல்ல ஏதுவாக அமையும் என சவுதி இராணுவத் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
எனினும் தமது ஜெட் விமானங்களுடன் எவ்விதத் துருப்புக்களும் அனுப்பப்படவில்லை எனவும் சவுதி இராணுவத் தளபதிகளில் ஒருவரான அஹ்மட்-அல்-அசிரி கூறுகிறார்.
 
இருந்தபோதிலும் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளின் தாக்குதலில், தரையிலிருந்தும் தாக்குதல் நடத்தப்பட வேண்டியத் தேவை ஏற்படும் என்றும் தாங்கள் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
அப்படியானத் தாக்குதலில் சவுதி அரேபியாவும் பங்குபெற உறுதிபூண்டுள்ளது எனவும் அந்த இராணுவத் தளபதி கூறுகிறார்.