1. செய்திகள்
  2. »
  3. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  4. »
  5. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 7 ஏப்ரல் 2014 (17:21 IST)

இந்தியாவின் பெரிய மருந்துக் கம்பனிகளின் புதிய முயற்சி

இந்தியாவின் முன்னணி மருந்துத் தயாரிப்பு நிறுவனமான சன் ஃபார்மஸூடிகல், அதன் போட்டி நிறுவனமான ரன்பாக்ஷியை 4 பில்லியன் டாலர்கள் விலைகொடுத்து வாங்க உடன்பட்டுள்ளது.

இந்தப் புதிய கொள்வனவின் மூலம் சன் ஃபார்மஸூடிகல் இந்தியாவின் மிகப்பெரிய மருந்துக் கம்பனியாக மாறுவது மட்டுமன்றி, உலகில் வணிக முத்திரையற்ற (ஜெனரிக்) மருந்துகளைத் தயாரிக்கும் 5-வது பெரிய நிறுவனமாகவும் உருவெடுக்கிறது.
 
நிறுவனத்தின் பங்குதாரர்களும் அரச கட்டுப்பாட்டு அதிகாரிகளும் இந்த ஒப்பந்தத்துக்கு இன்னும் அனுமதியளிக்க வேண்டியுள்ளது.
 
சிறந்த தயாரிப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டில் ரான்பாக்ஷி நிறுவனத்தின் சில மருந்துகளுக்கு அமெரிக்கா ஏற்கனவே விதித்துள்ள தடை காரணமாக அந்த நிறுவனம் பெருமளவு போராடிவருகிறது.
 
உலகின் மருந்துக்கடை என்ற பெயரில் இந்தியா அழைக்கப்பட்டுவருகின்றது.
 
உலகின் பிரபலமான வணிக முத்திரை கொண்ட மருந்துப் பொருட்களை இந்திய நிறுவனங்கள் மிகவும் குறைந்த விலைக்கு விற்கின்றன.
 
இதனால் பல நாடுகளில் குறித்த வணிக முத்திரை நிறுவனங்கள் தமது மருந்துகளுக்கான காப்புரிமையை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.