வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Suresh
Last Modified: வியாழன், 27 நவம்பர் 2014 (14:28 IST)

ராஜபக்சே "வெற்றிக்கு" மோடி வாழ்த்து-ராமதாஸ் கண்டனம்

இலங்கையில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் வெற்றிபெற ராஜபக்சேவுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்திருப்பது வருத்தமளிப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.


 
ராஜபக்சேவையும், அவரது கூட்டாளிகளையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கூண்டில் ஏற்றி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதே உலகெங்கும் உள்ள தமிழர்களின் விருப்பமாக உள்ளது.
 
இந்நிலையில், ராஜபக்சே, இலங்கை அதிபர் தேர்தலில் தொடர்ந்து 3ஆவது முறையாக வெற்றி பெற வேண்டும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருப்பதன் மூலம் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளையும் பிரதமர் நரேந்திர மோடி புண்படுத்திவிட்டார் என்றும் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
 
இலங்கைப் பிரச்சினையில் தமிழர்களின் உணர்வுகளை மதிக்கத் தவறியதால்தான் கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டு மக்கள் படுதோல்வியை பரிசாகத் தந்தார்கள் என்று கூறியுள்ள ராமதாஸ், இத்தகைய சூழலில் ஈழப் பிரச்சினையில் தமிழர்களின் உணர்வுகளை மதித்து, அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் பிரதமர் செயல்படுவதே சரியான அணுகுமுறை ஆகும் என்று கூறியுள்ளார்.