1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : புதன், 31 ஜூலை 2019 (11:32 IST)

ஃபுல் ஸ்விங்கில் வடகொரியா!! அசராத கிம்; மீண்டும் ஏவுகணை சோதனை

வட கொரியா அதன் கிழக்கு கடற்கரையோரம் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது என தென் கொரிய ராணுவம் யொன்ஹாப் செய்தி முகமையில் தெரிவித்துள்ளது.
 
புதன்கிழமை காலை ஏவுகணை ஹூடோ தீபகற்பத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது என தென் கொரியாவின் கூட்டு பணியாளர்களின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். அந்த ஏவுகணை 155 மைல்களுக்கு சென்று, 30 கிமீ உயரத்துக்கு பறந்து ஜப்பான் கடலுக்குள் விழுந்தது.
 
இதுவரை வட கொரியா இதுகுறித்து எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சகம், தங்கள் பிராந்தியத்தில் எந்த ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையும் வரவில்லை என தெரிவித்துள்ளது.
 
இதுவரை செலுத்தியதில் இது புதிய வகையான ஏவுகணை என்று கூட்டு பணியாளர்களின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த வாரம் குறைந்த தூரம் செல்லக்கூடிய இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்தது வடகொரியா.
வட கொரியாவின் கிழக்கு கடல் பகுதியில் அந்த சிறிது தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டன. `நேரடியான மற்றும் வலுவான அச்சுறுத்தல்களை` ஒழிக்க வட கொரியா அணு ஆயுதங்களை தயாரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக கிம் ஜாங்-உன் தெரிவித்திருந்தார்.
 
அந்த ஏவுகணை சுமார் 428 மைல்கள் பயணித்ததாக தென் கொரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தென் கொரியா மற்றும் அமெரிக்கா கூட்டாக ராணுவ நிகழ்ச்சி ஒன்றை திட்டமிட்டிருந்ததில் கோபமடைந்த வட கொரியா அந்த சோதனையை நடத்தியது.
 
அந்த பிராந்தியத்தில் இருக்கும் பதற்றத்தை குறைப்பதை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை வட கொரியா நிறுத்த வேண்டும் என தென் கொரியா தெரிவித்திருந்தது.