வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : திங்கள், 29 ஜூலை 2019 (12:05 IST)

ஹனி மூன் சென்ற இடத்தில் எரிமலைக்குள் விழுந்த புது மாப்பிள்ளை!!

தேன்நிலவுக்கு சென்ற இடத்தில் எரிமலை ஒன்றுக்குள் விழுந்த, புதுமாப்பிள்ளையை அவரது மனைவி மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
 
மவுண்ட் லியாமுய்கா எனும் அந்த எரிமலையின் உச்சி வரை 3.2 கிலோ மீட்டர் உயரத்துக்கு மலையேற்றம் செய்தபின் அதன் உள்ளே இருக்கும் பசும் தோற்றத்தை க்ளே சாஸ்டியன் எனும் அவர் பார்க்க முயன்றபோது தவறுதலாக சறுக்கி விழுந்துவிட்டார்.
 
அந்த எரிமலை செயலற்ற நிலையில் இருந்ததால் நெருப்புக் குழம்பு எதுவும் அவருக்கு பாதிப்பை உண்டாக்கவில்லை. எனினும், அவருக்கு கழுத்தில் காயம் உண்டானது.
கணவரின் கூக்குரல் கேட்ட அவரது மனைவி அகைமி அந்த எரிமலைக்குள் இறங்கி அவரை மீட்டபின், புளோரிடாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
 
க்ளே சாஸ்டியனை புளோரிடா மருத்துவமனைக்கு கொண்டு வர சிறப்பு விமானம் ஏற்பாடு செய்வதற்காக 30,000 டாலர் அளவுக்கு இணையம் மூலம் திரட்டப்பட்டது.
கரீபியன் தீவுகளில் ஒன்றான செயின்ட் கிட்ஸ் தீவில் கடந்த ஜூலை 18ஆம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த தம்பதிக்கு அதற்கு சில நாட்களுக்கு முன்புதான் இண்டியானா மாகாணத்தில் திருமணம் முடிந்தது.
 
"எரிமலைக்குள் விழுந்தபின் எழுந்து நிற்கக்கூட முடியாத நிலையில் இருந்த என்னை அவள் கீழே இருந்து சுமந்து வந்தது ஓர் அதிசயத்தைத் தவிர வேறொன்றும் இல்லை," என்று தன் மனைவியின் செயல் குறித்து க்ளே கூறியுள்ளார்.