1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (13:56 IST)

நரபலி கொடுக்கப்பட்ட 227 சிறார்களின் பிணக்குவியல் கண்டெடுப்பு!

பெருவில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வரலாற்றில் மிகப்பெரிய குழந்தைகளின் திரள் குழந்தைகள் பிணக்குவியலை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
 
ஐந்து முதல் 14 வயதுக்குட்பட்ட 227 சிறார்களின் சடலங்கள் பெருவின் தலைநகர் லிமாவுக்கு வடக்கே உள்ள கடலோர நகரமான ஹுவான்சாகோ அருகே கண்டெடுக்கப்பட்டன.
 
இந்த குழந்தைகள் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சென்ற ஆண்டு இதே நாட்டின் இருவேறு பகுதிகளில் 200 குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டதற்கான தடயங்கள் கண்டெடுக்கப்பட்டன.
 
சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த சிறுவர்களின் பிணக்குவியலில் சிலரது முடி மற்றும் தோல் புதைக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுவதாக ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் பேசிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
 
குழந்தைகள் ஈரமான வானிலையின் போது கொல்லப்பட்டு, கடலை நோக்கி புதைக்கப்பட்டுள்ளதால், கடவுள்களை திருப்திப்படுத்த அவர்கள் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.