வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  4. »
  5. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : புதன், 23 ஏப்ரல் 2014 (07:17 IST)

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் பயிற்சியாளர் டேவிட் மோய்ஸை நீக்கம்

உலகின் முன்னணி கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் தமது பயிற்சியாளரான டேவிட் மோய்ஸை பதிவி நீக்கம் செய்துள்ளது.

அவர் அந்தப் பொறுப்பில் பத்து மாதங்கள் மட்டுமே இருந்தார்.
 
உலகளவில் மிகவும் வெற்றிகரமான ஒரு கால்பந்து கிளப்பாக மான்செஸ்ட்டர் யுனைடெட்டை மாற்றிய பயிற்சியாளர் சர் அலெக்ஸ் ஃபெர்க்யூசன் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றதை அடுத்து மோய்ஸ் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
 
அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படும் வரை, அந்த அணியில் விளையாடிவரும் ரயான் கிக்ஸ் தற்காலிக பயிற்சியாளராக பொறுப்பேற்பார்.
 
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன் லீகின் அடுத்த போட்டிகளுக்கு மான்செஸ்டர் யுனைடெட் தகுதி பெறாமல் போனதே மோய்ஸ் பதவி நீக்கப்படுவதற்கு காரணம்.
 
இதன் காரணமாக அந்த அணிக்கு பல மில்லியன் டாலர்கள் அளவுக்கு நிதியிழப்பு ஏற்பட்டது.
 
வெற்றியும் வருமானமும்
 
மான்செஸ்டர் யுனைடெட் உலகில் மிகவும் பணக்கார கால்பந்து அணிகளில் ஒன்று. கடந்த ஆண்டு ஜூன் மாத முடிவில் அந்த அணியின் வருமானம் 500 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக இருந்தது.
 
அதேபோல 2012/13 ஆம் ஆண்டில் நிகர லாபமாக சுமார் 200 மில்லியன் டாலர்களை ஈட்டியது. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 13% கூடுதல் ஆகும்.
 
எனினும் வருவாயும், லாபமும் அணியின் வெற்றி தோல்விகளுடன் நேரடியாக தொடர்புடையது என அந்த கிளப் கூறுகிறது.
 
பிரீமியர் லீக், இங்கிலாந்து கால்பந்து சம்மேளனத்தின் FA கோப்பை, சாம்பியன்ஸ் லீக் ஆகியவற்றில் பெரும் வெற்றிகளே தமது அணியின் வருமானத்துக்கு ஒரு முக்கியக் காரணம் என்றும் அந்த அணியின் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.