வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 28 நவம்பர் 2015 (19:25 IST)

திமிங்கில வேட்டையை மீண்டும் தொடங்குகிறது ஜப்பான்

அண்டார்டிக் பகுதியில் திமிங்கில வேட்டையை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு செய்துள்ளது.
 

 
சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி திமிங்கல வேட்டையை ஜப்பான் முன்னெடுக்கிறது.
 
கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக இந்த வேட்டையை ஜப்பான் நிறுத்தி வைத்திருந்தாலும், நாட்டின் மீன் துறை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தின் இறுதிப் பகுதியில் கட்டுபடுத்தப்பட்ட வகையில் இந்த வேட்டை முன்னெடுப்படும் என அறிவித்துள்ளது.
 
புதிய திட்டத்தின்படி, ஆண்டொன்றுக்கு பிடிக்கப்படும் மின்க் வகைத் திமிங்கிலத்தின் எண்ணிக்கை, மூன்றில் இரண்டு பங்கு குறைக்கப்பட்டு, 300க்கும் சற்றே அதிகமானவை மட்டுமே வேட்டையாடப்படும்.
 
ஜப்பான் உடனடியாக அண்டார்டிக் பகுதியில் திமிங்கில வேட்டையை நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 
அறிவியல் ஆராய்ச்சிக்கு குறிப்பிடத்தகுந்த அளவுக்கு திமிங்கில வேட்டை தேவை என ஜப்பான் கூறியதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது.