1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: ஞாயிறு, 16 ஜூன் 2019 (18:28 IST)

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ மனைவி செய்த சமையல் மோசடி, அபராதம் விதித்த நீதிமன்றம்

அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூவின் மனைவி ஒப்புக் கொண்டுள்ளார். அவர் 15,000 அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பிரதமரின் இல்லத்தில் சமைப்பதற்கு யாரும் இல்லை என்று பொய் கூறி சாரா நெதன்யாஹூ, வெளியில் சமைப்பவர்களை ஏற்பாடு செய்ததன் மூலம் 99,300 அமெரிக்க டாலர்கள் செலவு செய்துள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
கடந்த வருடம் அவர் மீது மோசடி மற்றும் நம்பிக்கைக்கு விரோதமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.
 
இந்த குற்றச்சாட்டிற்கும் சாராவிற்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், நெதன்யாஹூவின் பெயரை கெடுப்பதற்கென்று இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார் சாராவின் வழக்கறிஞர்.
 
ஜெருசலம் போஸ்டில், சாராவின் மீது குற்றவியல் பதிவு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
இந்த தீர்ப்பின்படி சாரா நெதன்யாஹூ அரசுக்கு 12,490டாலர்கள் வழங்க வேண்டும் மற்றும் 2,777டாலர்கள் அபராதம் செலுத்த வேண்டும்.
 
"இந்த விசாரணையில் குறிப்பிடத்தகுந்த சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது அதனால் ஒரு சரியான மற்றும் சமமான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது." என வழக்கறிஞர் எரிஸ் படான் தெரிவித்துள்ளார்.
 
இந்த சமரசம் எட்டியதன் மூலம் நீதிமன்றத்துக்கு 80 சாட்சியங்களை வரவழைக்கப்பட வேண்டிய அவசியல் இல்லாமல் போனது என்று வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
 
கடந்த வருடம் உணவு தயார் செய்வதற்காக வெளிநபர்கள் அழைக்கப்பட்டது சாராவிற்கு தெரியாது என்றும், நிர்வாக மேலாளர்களால் உணவு ஆர்டர் செய்யப்பட்டு வரும் விருந்தாளிகளுக்கு பரிமாறப்பட்டது என சாராவின் வழக்குரைஞர் தெரிவித்திருந்தார்.