வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Murugan
Last Modified: சனி, 23 ஜூலை 2016 (20:07 IST)

காபூல் குண்டு வெடிப்பு: பலி 60 ஆக உயர்வு, தாக்குதலுக்கு பொறுபேற்றது ஐ.எஸ்

ஆப்கன் தலைநகர் காபூலில் பேரணியின் போது நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


 

 
இந்த குண்டு வெடிப்பானது, ஷியா முஸ்லிம்கள் என்று அழைக்கப்படும் சிறுபான்மையின மக்களான ஹசாரா ஆப்கானியர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்ட பேரணியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
 
இந்த தாக்குதலை இஸ்லாமிய அரசு என அழைத்து கொள்ளும் அமைப்பானது நடத்தியதாக தெரிவித்துள்ளது.கிழக்கு ஆப்கனில் அதன் இருப்பு இருந்தாலும், இதற்குமுன் தலைநகரில் நடைபெற்ற தாக்குதலுக்கு ஐ.எஸ் பொறுப்பேற்றது இல்லை.
 
படுகொலை நடந்ததற்கான காட்சிகள் உள்ளன. ரத்த தானம் செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த சம்பவத்தால் தான் ஆழ்ந்த துக்கத்தில் இருப்பதாக அதிபர் அஷ்ரஃப் கனி தெரிவித்துள்ளார்.