1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 30 ஜூலை 2020 (09:32 IST)

டிராக்டர் பெற்ற விவசாயி உண்மையில் ஏழையா? - சுழலும் விமர்சனங்கள்: உண்மை என்ன?

ஆந்திராவில் விவசாயி ஒருவரின் மகள்கள் ஏர் களப்பையை சுமந்து கொண்டு நிலத்தை உழுத வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த விவசாயி சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியை சேர்ந்தவர்.

இந்த வீடியோவை பார்த்த நடிகர் சோனு சூத் அவர்களுக்கு டிராக்டர் வாங்கி தந்துள்ளார். அரசும் இந்த விஷயத்தை கவனித்துள்ளது.

அரசாங்கம் நாகேஷ்வர ராவ்வின் குடும்பம் மோசமான வறுமையில் இல்லை என்றும், அவர்களுக்கு தேவையான நலத்திட்டம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

ஊடகங்களில் நாகேஷ்வர ராவ்வின் குழந்தைகள் வேடிக்கைக்காக இதை செய்தனர் ஆனால் இது வைரல் ஆனதும், அவர்கள் உழுவதற்கு மாடுகளை வாங்க இயலாமல் அவ்வாறு செய்வதாக கூறப்பட்டது என்பது போன்ற செய்திகள் வந்தன.

நாகேஷ்வர ராவ்வின் பெற்றோர் அரசாங்கத்தால் கட்டப்பட்ட இந்திரம்மா இல்லத்தில் வாழ்ந்து வருகிறார். நாகேஷ்வர ராவ்வின் குடும்பம் மதனப்பள்ளியில் வாடகை வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். கொரோனாவின் தாக்கத்தால் வருமானம் இல்லாமல் போகவே நாகேஷ்வர ராவ்வின் குடும்பம் அவரின் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.


குழந்தைகளின் படிப்பிற்காக அந்த குடும்பம் அவர்களின் கிராமத்தை விட்டு மதனப்பள்ளிக்கு வந்தனர். நாகேஷ்வர ராவ் டீ கடை நடத்தி குடும்பத்திற்கான வருமானத்தை ஈட்டி வந்துள்ளார். அவர் நீண்ட நாட்களுக்கு முன்பாகவே விவசாயத்தை விட்டுவிட்டார்.

எனவே நாம் `ஏழை விவசாயி` என்று கேட்டவுடன், கிழிந்த ஆடைகளும் சோர்ந்த உடலுமே நம் மனதில் வந்திருக்கிறோம். ஆனால் அவர் அப்படி இல்லை. அவர் நகரத்தில் வாழும் `நகர்புற டீக்கடை` நபர்.

டிராக்டருடன் ராகேஷ்வர ராவ்
"நாகேஷ்வர ராவ் ஒரு தலித் என்றும், அவர் ஒரு மனித உரிமை பணியாளர் என்றும், 2009 லோக் சட்டா கட்சியின் சார்பில் போட்டியிட்டு 1000க்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார்," என்றும் செய்திகள் வெளியாகின.

நடந்தது என்ன என்பதை தெரிந்துகொள்ள பிபிசி சித்தூர் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டது.

"அந்த குடும்பத்திற்கு இந்த வருடமும், கடந்த வருடமும் விவசாய முதலீட்டு உதவி திட்டமான 'ரிட்டு பந்து' திட்டம் மூலம் உதவிகளை வழங்கினோம். அவர்கள் டிராக்டர் வைத்து விவசாயம் செய்ய முடியாத அளவு ஏழைகள் அல்ல. அவர்கள் டிராக்டரை வாடகைக்கு எடுத்துள்ளனர். ஆனால் டிராக்டர் வருவதற்கு முன்பு இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது," என்று ஆட்சியர் பாரத் குப்தா பிபிசியிடம் தெரிவித்தார்.

மேலும், "நாகேஷ்வர ராவ் டீக்கடை நடத்தி வருகிறார். அவரின் இளைய மகளிற்கு 'அம்மா வோடி' (தாய் மடி) என்ற அரசுத் திட்டம் மூலம் 10,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் குடும்பம் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வருமானம் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவரின் மகள்கள் வேறு வழி இல்லாமல் உழவு செய்தார்களா அல்லது வேடிக்கைக்காக செய்தார்களா என்பதை எங்களால் சொல்ல முடியவில்லை." என்றும் ஆட்சியர் குப்தா தெரிவித்தார்.

தேர்தலில் போட்டி

அரசு தந்த இந்த தகவல்கள் குறித்து நாகேஷ்வர ராவிடம் பிபிசி கேட்டபோது,

"ஆம். நான் ஒரு தலித். மனித உரிமைக்கான பணியாளர். லோக் சட்டா கட்சியின் சார்பாக 2009ஆம் ஆண்டு தேர்தலில் நான் போட்டியிட்டுள்ளேன். எனக்கு ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன. ஆனால் தேர்தல் வேட்பாளராக வேறு ஒருவர் நிற்க வேண்டியிருந்தது நான் அவரிடம் மாதம் 6000 ரூபாய்க்காக வேலை பார்த்தேன். அவர் வேட்பு மனுவும் தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு வாக்குகள் கிடைக்காது என்று தெரிந்தவுடன் அவர் போட்டியிட விரும்பவில்லை. மேலும் சொற்ப வாக்குகள் பெற்று அவர் தோல்வியுற விரும்பவில்லை எனவே எனக்கு தேர்தல் பிரசார செலவுக்காக 50,000ரூபாய் வழங்கி என்னை போட்டியிட சொன்னார். அப்படிதான் நான் தேர்தலில் போட்டியிட்டேன்," என்கிறார் நாகேஷ்ரவர ராவ்.

`எனக்கு சங்கடமாக உள்ளது`

கடந்த வருடம் `ரித்து பந்து`(விவசாய முதலீட்டு உதவி திட்டம்) மூலம் 20,000 பெற்றதாகவும், அவரின் இளைய மகளுக்கு அம்மா வோடி என்ற திட்டத்தின் மூலம் 10,000ரூபாய் வழங்கப்பட்டதாகவும் அரசு கூறியது குறித்து அவரிடம் கேட்டபோது, "ஆம். ஆட்சியர் சொன்னது உண்மைதான். ரித்து பந்து திட்டம் மூலம் நாங்கள் பணம் பெற்றோம். ஆனால் எவ்வளவு பணம் என்பது எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் நிலம் எனது தந்தைக்கு சொந்தமானது," என்றார்.

ராகேஷ்வர ராவ்வின் மகள்கள்

"எனது மகள் பெற்ற 10,000 ஆயிரத்தை நான் அவளின் பள்ளிக்கட்டணம் செலுத்த பயன்படுத்திவிட்டேன். மூத்த மகளின் பள்ளிக் கட்டணமான 20,000ரூபாயை நாங்கள் இன்னும் செலுத்தவில்லை. இளைய மகளின் பள்ளிக் கட்டணம் 15,000ரூபாய். மதனப்பள்ளியில் வாடகை செலுத்த முடியாத காரணத்தால் நான் இங்கு வந்துவிட்டேன். எனது மனைவி மற்றும் எனது மகள்களுடன் எனது தந்தை வீட்டில் வாழ்ந்து வருகிறேன். எனக்கு இதை சொல்ல சங்கடமாகதான் உள்ளது ஆனால் எனது குடும்பம் எனது தந்தையின் பென்ஷன் பணத்தை நம்பிதான் உள்ளது. கொரோனா இல்லை என்றால் எங்களுக்கு இந்த இல்லை வந்திருக்காது," என்கிறார் நாகேஷ்வர ராவ்.

தோற்றம் குறித்து பேசும் மக்கள்…

"எனது மகள்களிடம் விவசாயத்திற்கு பணம் இல்லை நாம் விவசாயம் செய்ய வேண்டாம் என்று கூறினேன். ஆனால் அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அவர்கள் உதவி செய்து என்னை விவசாயம் செய்ய கட்டாயப்படுத்தினர். அவர்கள் களப்பை ஏந்தி உழுதனர். நான் அவர்களிடம் நகைச்சுவையாக பேசி வேலைபலு தெரியாமல் பார்த்துக் கொண்டேன். எனது உறவினர் இந்த வீடியோவை எடுத்தார். எனது மகள்களுக்கு விவசாயம் தெரியாது. எனவே அந்த வீடியோ எடுக்கும்போது அவர்கள் வெட்கத்தில் சிரித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த விடியோ வெளியான பிறகு அதில் எனது மகள்கள் சிரிக்கிறார்கள் என்றும், அவர்கள் பருமனாக உள்ளார்கள் நாங்கள் ஏழைகள்தானா என்றும் பலர் கேள்வி எழுப்புகின்றனர். எங்களது உடல் அமைப்பையும், எங்களது நிறத்தையும் வைத்து ஏன் எங்களை மதிப்பீடு செய்ய வேண்டும்? நான் ஒரு பட்டதாரி. எனது மகள்களையும் படிக்க வைக்க விரும்புகிறேன் அதில் என்ன தவறு?" என்கிறார் நாகேஷ்வர ராவ்.

"நாங்கள் என்ன குற்றம் செய்தோம்?"

"நான் எனக்கு விவசாயம் தெரியாது எனக்கு உதவி செய்யுங்கள் என்று யாரிடமும் கேட்கவில்லை…எனக்கு அரசு உதவி செய்யவில்லை என்று நான் கூறினேனா?….எங்களின் வாழ்க்கையை நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர் எங்களுக்கு டிராக்டர் பரிசளித்தார் என்பதற்காக சிலர் எவ்வாறெல்லாம் பேசுகிறார்கள். நான் உண்மையில் ஏழையா என்று பார்ப்பதற்கு அரசு அதிகாரிகள் எனது வீட்டிற்கு வந்தனர். நான் தலித்தாக இருந்து எனக்கு வசதி இருந்தால் அவர்கள் எனது வீட்டிற்கு வந்திருப்பார்களா?" என்கிறார் நாகேஷ்வர ராவ்.