வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 3 மே 2023 (12:27 IST)

கனவு காண்பதில் இவ்வளவு ஆபத்தா? - ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்

உறக்கத்தின்போது நிகழும் அலாதி அனுபவமான கனவை காண்பதில் மனிதனுக்கு ஓர் இனம்புரியாத ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. ஆழ்ந்த தூக்கத்தில் வரும் கனவானது அதன் தன்மையை பொறுத்து மனிதனை ஆச்சரியப்படவும், அதிர்ச்சியடையவும் வைக்கிறது.
 
சில கனவுகள் சினிமா காட்சிகளை போல மனிதனுக்கு தெளிவாக நினைவில் நிற்கின்றன. சில கனவுகள் மறுநாள் காலை விவரிக்க முடியாத அளவுக்கு தெளிவில்லாமல் தோன்றி மறைவதாகவும் உள்ளன.
 
நினைவில் நிற்கும் தெளிவான கனவுகளை ( Lucid Dreams) காண்பதில் மனிதர்களுக்கு சமீபகாலமாக ஆர்வம் அதிகரித்து வருவதை இதுதொடர்பான இணையவழி தேடல்கள் மூலமாக அறிய முடியவதாக கூறும் உளவியல் மருத்துவ நிபுணர்கள், ஊடகங்களில் பேசும் அளவுக்கு இதுகுறித்த ஆர்வம் உலக அளவில் அதிகரித்துள்ளது என்கின்றனர்.
 
ஆனால், தெளிவான கனவுகள் விடுக்கும் எச்சரிக்கை, இவற்றால் விளைவும் ஆபத்துக்ள் ஆகியவை குறித்து யாரும் கருத்தில் கொள்ளவதில்லை என்றார் இஸ்ரேலின் பென் குரியன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ உளவியல் ஆராய்ச்சியாளரான நிரித் சோஃபர் டுடெக். இந்த விஷயம் யாருக்கு நல்லது, யாருக்கு கெட்டது என்பது குறித்து நமக்கு மிகுந்த கவனம் தேவை என்கிறார் அவர்.
 
கனவு மீதான ஈர்ப்பு
 
கனவுகள் குறித்த ஆர்வம், ஈர்ப்பு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துவரும் நிலையில், இதுதொடர்பான ஆராய்ச்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
தெளிவான அல்லது விழிப்புநிலை கனவுகள் குறித்த ஒரு ஆய்வில், அதனை காண்பவர்களின் இதயத்துடிப்பும் சுவாசத்தின் அளவும் உறக்கத்தின்போது குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட விழித்திருக்கும் நிலையில், ஒரு மனிதன் உடற்பயிற்சி செய்வது போன்றதாகும் என்கிறது அந்த ஆய்வு.
 
அடிக்கடி கனவு காண்பவர்கள் மற்றும் கனவு பிரச்னை உள்ளவர்கள் அதிலிருந்து விடுபவதற்கான வழியாக தெளிவான கனவை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
 
“கனவு காணும்போது உங்களால் விழிப்பு நிலையில் இருக்க முடிந்தால், நீங்கள் நிஜவாழ்க்கையில் உங்களுக்கு அதிகாரம் அளிக்கும் செயல்களை செய்யலாம். அத்துடன் கனவுகளால் ஏற்படும் எதிர்விளைவுகளை சமாளிக்கும் திறனையும் மேம்படுத்தலாம்” என்கிறார் ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் பல்கலைக்கழகத்தின் உளவியல் ஆய்வாளரான டென்ஹோல்ம் ஆஸ்பி.
 
மனிதனின் கனவு சிக்கலுக்கு சிகி்ச்சை அளிப்பதில் தெளிவான கனவு ஒரு சாத்தியமான வழிமுறை என்று, 2019 இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு பகுப்பாய்வு ஒப்புக் கொண்டுள்ளது.
 
தொடர் மருத்துவ சிகிச்சைகளால் ஒருவருக்கு ஏற்படும் மனஅழுத்தம் அல்லது தொடர் மருத்துவ சிகிச்சைக்கு பிந்தைய மனஉளைச்சல் போன்ற தீவிர உளவியல் கோளாறுகளுக்கு ஒரு தீர்வாக தெளிவான கனவை சில ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
 
ஆனால் இந்த சிகிச்சையின் விளைவுகளை மதிப்பிடுவதற்கு தற்போதைய மருத்துவ நடைமுறையில் இதுபற்றிய ஆராய்ச்சிகள் குறைவாகவே மேற்கொள்ளப்படுகின்றன.
 
அடிக்கடி கனவு தொல்லைக்கு ஆளாகுபவர்கள், மனஅழுத்தம், மனஉளைச்சல் போன்ற உளவியல் சிக்கல்களுக்கு ஆட்படுவோர் இவற்றில் இருந்து மீள, அவர்களை தெளிவான கனவு காணும்படி தூண்டலாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஆனால் அதேசமயம், “ஸ்கிசோஃப்ரினியா,பித்து நிலை போன்ற தீவிர மனநிலை கோளாறில் உள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், தெளிவான கனவு தூண்டுதல் வழிமுறையை கையாளாகக்கூடாது. இந்த வழிமுறையானது அவர்களது நிலைமையை மேலும் மோசமாக்கக்கூடும் என்பதால் இதனை தவிர்க்க வேண்டும்” என்கிறார் ஆய்வாளர் ஆஸ்பி.
 
“பித்துநிலை,ஸ்கிசோஃப்ரினியா போன்ற தீவிர மனநிலை பிரச்னைகளில் உள்ளவர்களுக்கு, தெளிவான கனவு தூண்டுதல் குறித்த மருத்துவ நுட்பங்கள் ஆதரமற்றதாக இருக்கலாம் என்பதை ஒப்புக் கொள்கிறேன்” என்கிறார் அமரிக்காவின் இலினாய்சில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் உளவியல் ஆராய்ச்சியாளர் கரேன் கோல்கோனி.
 
தெளிவான கனவு நிலைக்கும், அதற்கான உளவியல் அறிகுறிகளுக்கும் இடையேயான தொடர்பு குறித்து 2016 இல் பிரேசிலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
 
பித்து நிலை போன்ற தீவிர மனநல கோளாறுக்கு ஆளானவர்கள் மற்றும் இந்த பிரச்னைகளுக்கு ஆளாகாதவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், தீவிர மனநோயாளிகளுக்கு, தெளிவான கனவு தூண்டுதல் வழிமுறை, யதார்த்ததுடன் தொடர்பில்லாத அவர்களின் மயக்க நிலையையோ, மாயத்தோற்றத்தோ மேலும் கூட்டுவதாக உள்ளது என்று அந்த ஆய்வு முடிவில் தெரிய வந்தது.
 
மனநோயாளியாக இருக்கும் ஒருவருக்கு, தெளிவான கனவு தூண்டல் நுட்பத்தை பயன்படுத்துவது அவர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கிவிடும் அபாயம் இருப்பது பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதை போலவே, பிரபல உளவியல் ஆய்வாளரான சோஃபர் டுடெக்கும் இந்த கூற்றை ஒப்புக் கொள்ளதான் செய்கிறார்.
 
மனச்சோர்வு, மனஅழுத்தம் ,பதற்றம் போன்ற பல்வேறு உளவியல் கோளாறுகளுக்கு ஆளானவர்களில், தெளிவான கனவு நுட்பங்கள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து, சோஃபர் டுடெக் மற்றும் அவரது மாணவர் லியாட் அவிராம் 2018 ஓர் விரிவான ஆய்வை மேற்கொண்டார்.
 
அந்த ஆய்வில் அதிர்ச்சிகரமான விஷயம் ஒன்று தெரிய வந்தது.
 
தெளிவான கனவுகளை தூண்டுவதற்காக பயன்படுத்தப்படும் மருத்துவ தொழில்நுட்பங்கள், ஒருவரின் தூக்க கலக்கத்துக்கு வழிவகுப்பதுடன், அவரது தூக்கத்தின் தரத்தையும் கெடுத்துவிடுகிறது என்ற அதிர்ச்சி தகவல் ஆந்த ஆய்வில் தெரிய வந்தது. தூக்க கலக்கத்தால் ஒருவரின் மனநோய்கள் அதிகரிக்கும் ஆபத்தும் இருப்பதாக ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
 
“தூக்கத்தின் முக்கியத்துவம் குறித்த பல்வேறு ஆய்வுகள் குறித்து நன்கு அறிந்தவன் என்ற முறையில், தெளிவான கனவை தூண்டும் மருத்துவ நுட்பங்கள், மனிதனுடைய தூக்கத்தையே கெடுத்து, அவனை கலக்கமான மனநிலைக்கு தள்ளிவிடுகிறது என்று தமக்கு தோன்றுவதாகவும், இந்த அணுகுமுறை சிலருக்கு தூக்க கலக்கத்தை தாண்டி தீங்கு விளைவிக்க கூடியதாக இருக்கக்கூடும்” என்று அச்சம் தெரிவிக்கிறார் சோஃபர் டுடெக்.
 
தெளிவான கனவு கண்ட அனுபவம், இதனை தூண்டுவதற்கான மருத்துவ தொழில்நுட்பம் பயன்பாடு, இதனால் ஏற்படும் உளவியல் தாக்க அறிகுறிகள் ஆகியவை குறித்து, 187 உளவியல் இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு ஒன்றை சோஃபர் டுடெக் நடத்தினார்.
 
இந்த தேர்வில் பங்கேற்ற மாணவர்களில் பாதி பேர், இரண்டு மாதங்கள் கழி்த்து மீண்டும் அதே தேர்வில் பங்கேற்க செய்யப்பட்டனர். அதன் பின்னர் அவர்கள் தொடர்ந்து 14 நாட்கள், தங்களது கனவுகள் குறித்த அனுபவத்தை நாட்குறிப்பில் எழுத பணிக்கப்பட்டனர். அதன்பின்னர், தெளிவான கனவை தூண்டும் நுட்பங்கள், மனிதனின் உளவியல் தாக்கத்தை அதிகரித்துள்ளதா அல்லது குறைத்துள்ளதா என்று ஆராயப்பட்டது.
 
இந்த ஆய்வில் பங்கேற்ற மொத்த மாணவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேருக்கு, தெளிவான கனவை தூண்டும் தொழில்நுட்பம் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியது தெரிய வந்தது.
 
இவற்றில் Dissociative Experience எனப்படும் மனநல கோளாறு, Schizotypy எனும் உளவியல் சிக்கல் ஆகிய இரண்டு எதிர்மறை அறிகுறிகள் மிகவும் முக்கியமானவை என்கிறார் சோஃபர் டுடெக்.
 
இந்த இரண்டு அறிகுறிகளும் உறக்கத்துக்கும், விழிப்புக்கும் இடையேயான எல்லைகள் அல்லது கனவு மற்றும் நிஜத்துக்கு இடையேயான எல்லைகளுடன் தொடர்புடைவை எனும் சோஃபர் டுடெக், அதாவது எது உண்மை, எது பொய் என்பதை தெளிவதில் உள்ள குழப்பதுடன் இந்த அறிகுறிகள் தொடர்புடையவை என்கிறார்.
 
மனிதனுக்கு ஏற்படும் பல்வேறு உளவியல் பிரச்னைகளுக்கு தெளிவான கனவைக் காட்டிலும், அதனை தூண்டும் நுட்பங்கள்தான் காரணமாக இருக்கின்றன என்று ஆணித்தரமாக கூறுகிறார். சோஃபர் -டுடெக். அவரது இந்த கருத்தை பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் ஆமோதிக்கின்றனர்.
 
லுதுவேனியாவில் உள்ள வில்னியஸ் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை உதவிப் பேராசிரியரான தடாஸ் ஸ்டம்ப்ரிஸ், மனிதனின் உறக்கத்தில் வரும் தெளிவான கனவுகள் தூக்கத்தின் தரம், தூக்கத்தை கலைத்தல் மற்றும் மனநலம் போன்றவற்றில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றதா என்பதை அறிய, 500 நபர்களிடம் ஆன்லைனில் ஆய்வு மேற்கொண்டார்.
 
அதில் தெளிவான கனவு தூக்கத்தின் தரம் மற்றும் தூக்கம் கலைதலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதும், தெளிவான கனவு காண்பவர்களின் மனநிலையும் நல்ல முறையில் இருப்பதும் தெரிய வந்தது.
 
அதாவது, தெளிவான கனவை விட, அதனை தூண்டும் மருத்துவ தொழில்நுட்ப வழிமுறைகள்தான் மனித மனதில் எதிர்மறை பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்ற சோஃபர் -டுடெக்கின் கூற்றை மெய்ப்பிப்பதாக அமைந்திருந்தது தடாஸ் ஸ்டம்ப்ரிஸின் ஆய்வு முடிவுகள்.
 
கலையும் தூக்கம்
 
தெளிவான கனவை தூண்டுவதற்கான தொழில்நுட்பங்களை அடிக்கடி பயன்படுத்தினால், அது மனிதனின் தூக்கத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஒப்புக்கொள்கிறார் ஸ்டம்ப்ரிஸ்.
 
எந்தவொரு நுட்பத்திலும் உடல் மற்றும் மனரீதியான தீங்குகளும் ஓரளவுக்கு இருக்கதான் செய்கிறது எனக்கூறும் அவர், தெளிவான கனவு காண்பதில் உள்ள சிலருக்கு இருக்கும் வெறித்தனமான ஆர்வமே அவர்களின் தூக்கம் கலைய காரணமாகிவிடுகிறது என்கிறார் அவர்.
 
கனவை தூண்டும் நுட்பத்தை கைகொள்வது ஒருவரின் இரவு தூக்கத்துக்கு எதிரான நேரடி அச்சுறுத்தல் என எச்சரிக்கும் சோஃபர் -டுடெக். நான்கு அல்லது ஆறு மணி நேர உறக்கத்துக்கு பிறகு உங்களை விழிப்படைய செய்யும் மருத்துவ நுட்பமும், ஒருவர் ஆழ்ந்து உறங்குகிறாரா அல்லது விழித்திருக்கிறாரா என்று கண்காணிக்கும் தொழில்நுட்பமும் நிச்சயமாக நல்ல இரவு உறக்கத்துக்கு எதிரானவை என்கிறார்.
 
தெளிவான கனவு காண இதுபோன்ற தொழில்நுட்பங்களை சார்ந்திருப்பதற்கு பதிலாக, இதற்கான பயிற்சிகளை மேற்கொள்வே எவ்வித எதிர்விளைவுகளும் இ்லலாமல் ஒருவர் கனவு காண்பதற்கான சிறந்த வழிமுறை என்று யோசனை கூறுகிறார் சோஃபர் -டுடெக்.
 
அதேநேரத்தில், தூண்டப்படும் தெளிவான கனவுகள், மனிதனிடம் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதற்கான ஆய்வு சான்றுகள் இருக்கதான் செய்கின்றன.
 
ஜெர்மனியின் மன்ஹெய்மில் உள்ள மத்திய மனநல சுகாதார நிறுவனத்தின் ஆராய்ச்சியாளரான மைக்கேல் ஷ்ரெட்ல் 2020 இல் மேற்கொண்ட ஆய்வு, முடிவுகள், தெளிவான கனவுகளை தூண்டும் நுட்பங்களுக்கு சாதகமாக அமைந்திருந்தன.
 
“தூண்டல் நுட்பங்கள் மூலம் இரவு கனவு கண்டவர்களால், மறுநாள் காலை உற்சாகமான மனநிலையுடன் இருக்க இயலுகிறது.அத்துடன் அவர்கள் முதல்நாள் இரவு கண்ட கனவை, காலையில் தெளிவாக விவரிக்கின்றனர். அப்படியானால், கனவு தூண்டுதல் தொழில்நுட்பங்கள் அவர்களுக்குள் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்றுதானே அர்த்தம்” என்கிறார் மைக்கேல் ஷ்ரெட்ல்.
 
கனவு முயற்சி தோல்வியும், மோசமான தூக்கமும்
 
தெளிவான கனவை அனுபவிக்கும் ஒருவருக்கு, அந்த அனுபவம் நேராத இரவு வேளைகளிலும் தூக்கத்தில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை என்கிறது மற்றொரு ஆய்வு.
 
“கனவு தூண்டலுக்கான நுட்பத்தை ஒருவர் விரைவாக முடித்து, தூங்க சென்றுவிட்டால் அது ஒரு பிரச்னையே இல்லை” என்கிறார் ஆய்வாளர் ஆஸ்பி.
 
தெளிவான கனவில் ஒருவர் செலவிடும் நேரம், அவரது தூக்கத்தை பாதிக்குமா என்றால் அனேகமாக இல்லை என்கிறார் ஆஸ்பி.
 
சராசரி நபர் காணும் கனவுகளில் பெரும்பாலானவை தெளிவற்ற கனவுகளாகவே இருக்கும் எனக் கூறும் அவர், மோசமான மற்றும் குழப்பமான மனநிலையில் ஒருவர் காணும் தெளிவற்ற கனவு நேரத்தின் அளவு, தெளிவான கனவுகளின் ஒரு சிறிய அளவே ஆகும் என்றார் ஆய்வாளர் 
 
ஆஸ்பி.தூக்கத்தை முடக்கும் கனவு
 
இப்படி தெளிவான கனவு தொழில்நுட்பங்கள் குறித்து நேர் மற்றும் எதிர்மறையான ஆய்வு முடிவுகள் பல இருந்தாலும், இந்த நுட்பங்கள் குறித்து ஆஸ்பி சொல்லும் ஒரு விஷயம் அதிர்ச்சிகரமாக உள்ளது.
 
“தெளிவான கனவுகளை தூண்டும் சில நுட்பங்கள் தூக்கத்தை முடக்குவதற்கான வாய்ப்பை அதிகரிக்கலாம்” என எச்சரிக்கிறார் ஆஸ்பி..
 
ஆனால், “விரும்பதகாத ஒன்றான தூக்க முடக்குதல் குறித்த விழிப்புணர்வு இருந்தால், அது ஒருவரின் தெளிவான கனவு நுட்பத்தை பாதிக்காது” என்றும் கனவு விரும்பிகளுக்கு தைரியம் கூறுகிறார் அவர்..
 
2016 இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெளிவான கனவுக்கும், தூக்க முடக்குதலுக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. ஆனாலும் இந்த முடக்கம் பெரும்பாலும், மோசமான தூக்கம், மனஅழுத்தம், பதற்றம் ஆகியவற்றுடன் தொடர்புடையவை என்கிறது அந்த ஆய்வு.
 
தூண்டப்பட்ட தெளிவான கனவுகள், ஒரு குறிப்பிட்ட விஷயத்தை பற்றிய கனவை முடிவுக்கு கொண்டு வரும் அல்லது அந்த கனவு மீண்டும் வருவதை தடுக்கும். அதேசமயம் டிஸ்ஃபோரிக் எனப்படும் அதிபயங்கரமான கனவுகளை அது தூண்டும் என்கிறது 2022 இல் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு. கனவு தூண்டுதல் முயற்சிகளின் தோல்வி காரணமாகவும், குறைந்த கட்டுப்பாடு கொண்ட கனவின் விளைவாகவும் இப்படி நிகழ்வதாக கூறுகிறது அந்த ஆய்வு.