வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Annakannan
Last Modified: சனி, 25 அக்டோபர் 2014 (22:36 IST)

இரானில் ரெய்ஹானே ஜப்பாரிக்குத் தூக்கு தண்டனை நிறைவேற்றம்

இரானில் தன்னைப் பாலியல் வன்புணர்ச்சி செய்ய முயன்றதாகத் தெரிவிக்கப்படும் ஆண் ஒருவரைக் கொன்றதாக குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்த பெண்ணொருவரை இரான் தூக்கிலிட்டுள்ளது.
 
தூக்கிலிடப்பட்டுள்ள ரெய்ஹானெ ஜப்பாரி
 
இவருக்கு மரண தண்டனை நிறைவேற்றக் கூடாது என இரானுக்குள்ளிருந்தும் சர்வதேச அளவிலும் வலியுறுத்தப்பட்டிருந்தும்கூட 26 வயது ரெய்ஹானெ ஜப்பாரிக்குத் (Rayhaneh Jabbari) தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
தூக்கு மேடையைத் தவிர்க்க வேண்டுமானால் இறந்த ஆணின் குடும்பத்தாரிடம் இருந்து ரெய்ஹானேவின் குடும்பத்தார் ஒப்புதல் பெற வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. ஆனால் அந்த ஒப்புதலைப் பெற அவர்கள் தவறிவிட்டார்கள் என இரானிய அரசுச் செய்தி நிறுவனம் கூறுகிறது.
 
மேலும் தற்காப்புக்காகவே அந்த ஆணைக் கொன்றதாக ரெய்ஹானெ வழக்கில் நிரூபித்திருக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.
 
ஆனால் இந்தப் பெண்ணின் ஒப்புதல் வாக்குமூலம் அழுத்தம் கொடுத்துப் பெறப்பட்டிருந்தது எனவும், அவர் மீது மீண்டும் வழக்கு நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஐநா வாதிட்டிருந்தது.
 
சனிக்கிழமை காலை தூக்கிலிடப்பட்டிருந்த ரெய்ஹானெவை, அவரது தாயார் வெள்ளியன்று சென்று பார்த்து வந்திருந்தார்.