1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 20 ஜனவரி 2015 (15:19 IST)

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை 30 சதவிதமாக அதிகரித்துள்ளது என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
2010 ஆம் ஆண்டில் 1706ஆக இருந்த இந்திய புலிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 2226ஆக உயர்ந்துள்ளதாக புலிகளின் சமீபத்திய எண்ணிக்கை தொடர்பிலான கணக்கெடுப்பு அறிக்கையில் இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
குறைந்துவரும் புலிகளின் எண்ணிக்கை தொடர்பில் தொடர்ந்தும் கவலை வெளியிட்டு பிரச்சாரங்கள் மேற்கொண்டு வந்த ஆர்வலர்கள் இந்த செய்தியை வரவேற்கிறார்கள் என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
 
உலகின் மொத்த புலிகளில் கிட்டத்தட்ட 70 சதவிதம் இந்தியாவில் உள்ளது என்று மதிப்பிடப்படுகிறது.