1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (14:33 IST)

ஹூவாவே - அமெரிக்கா மோதல்: தொழில்நுட்ப யுக்திகளை திருடியதாக குற்றச்சாட்டு

அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து தொழில்நுட்பத்தை திருட பல தசாப்தக் காலங்களாக ஹூவாவே முயற்சி செய்து வருகிறது என மீண்டும் புதிய குற்றச்சாட்டுகளை ஹூவாவே நிறுவனத்தின் மீது சுமத்தியுள்ளது அமெரிக்கா.
 
அமெரிக்க நிறுவனங்களிடம் கூட்டணி நிபந்தனைகளை ஹூவாவே மீறிவிட்டதாகவும், ரோபோட் தொழில்நுட்பம் மற்றும் சோர்ஸ் கோட் (Source code) போன்ற வர்த்தக ரகசியங்களை திருடியதாக வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
 
கடந்த வருடம் ஹூவாவே நிறுவனத்தின் மீது அமெரிக்கா பல குற்றச்சாட்டுகளை சுமத்தியது. அதில் ஹூவாவே அமெரிக்க கட்டுப்பாடுகளை மீறுவதாகவும், (T series) அலைப்பேசியிலிருந்து தொழில்நுட்பத்தை திருடியவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
 
ஆனால் தங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஹூவாவே நிறுவனம் மறுக்கிறது. உலகின் மிகப்பெரிய அலைப்பேசி தயாரிப்பாளர்களாக இருக்கும் ஹூவாவே நிறுவனம், தங்களின் விரிவாக்கம் அமெரிக்க வர்த்தகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் அமெரிக்கா தங்களை இலக்கு வைப்பதாக தெரிவித்துள்ளது.